நார்த்தம் பழத்தின் மருத்துவ பயன்கள்.

0
196

வளரும் குழந்தைகள் முதல் முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் பழங்களை அதிகம் சாப்பிட்டே ஆகவேண்டும். இந்த குறிப்பில் எங்கும் கிடைக்கும் நார்த்தம் பழம் பற்றி அறிந்து கொள் வோம்.

எலுமிச்சை வகையைச் சார்ந்த இந்த பழம் பெரிதாக சாத்துகுடி அளவில் காணப்படும்.காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நன்கு பழத்த பழம் மஞ்சள், பச்சை கலந்து காணப்படும். பழத்தின் தோல்பகுதி கனமானதாக இருக்கும். இவற்றில் நீர் நிரம்பியிருக்கும். பழத்தின் உள்ளே எட்டு அல்லது பத்து சுளைகள் காணப்படும். கிராம மக்களின் சாத்துகுடியாக நார்த்தம் பழமே விளங்குகிறது.

பழங்காலத்தில் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டின் கொல்லைப்புறத்திலும் நார்த்தை, முருங்கை, எலுமிச்சை, தென்னை மரங்கள் கண்டிப்பாக இருக்கும். இந்த நார்த்தை மரங்கள் நூறு ஆண்டுகளுக்குமேல் வாழக்கூடியவை.

நார்த்தம் பழத்தின் மகத்துவம் :

1.பித்த அதிகரிப்பால் ஈரல் பாதிக்கப்படுவதுடன் இரத்தமும் அசுத்தமடைந்து பல நோய்கள் ஏற்படுகின்றன இந்த பித்த அதிகரிப்பால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உண்டாகிறது. இதற்கு நார்த்தம் பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

2.உடல் சூடு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உடல் சூடு தணிய தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும்.

3.இரத்தம் மாசடையும்போது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும்.

4.நார்த்தம் பழத்தை சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும்.

5.நோயின் தாக்கத்தினால் அவஸ்தைப்பட்டு விடு பட்டவர்களின் உடல்நிலை தேற நார்த்தம்பழச் சாறு அருந்துவது மிகவும் நல்லது.

6.இப்பழச்சாறு மதிய வேளையில் அருந்திவந்தால் வெயிலின் தாக்கம் குறையும்.

7.வாந்தி, மயக்கத்தைப் போக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here