நானும் நீயும்…

0
11

நானும் நீயும்…

நின் முத்தத்தின் சத்தங்கள்
பெரிதாய் என்ன செய்துவிடும் என்றிருந்தேன்…
இதோ..
எந்தன் உயிரின் ஆழம்வரை பாய்ந்து
உறைய வைக்கிறது
நீயிடும் முத்தங்கள்…

கூட்டுக்குள் தன்னுடலை
இழுத்துப் பதுக்கிக்கொள்ளும் நத்தையென
என் உணர்வுகள் அத்தனையும்
தன்வசமிழக்க உன்வசமாய்
உள்ளிழுத்துக் கொள்கிறாய்…
தொட்டாற்சுருங்கியென நானும்
பட்டெனச் சுருள்கிறேன் உன்னுள்…
நின் முத்தத்தின் சத்தமதில்
மூர்ச்சையாகிறதென் நாணங்கள்…

நீயிடும் முத்தத்தின் சத்தங்கள்
செவிவழி உள்நுழைந்து
புதியதொரு ரசாயன மாற்றமொன்றை
நடத்திச் செல்கிறது…
நீயும் நானும் நாமாகவே
கலந்துக் கரைந்திட
வைக்கிறதுன் முத்தங்கள்…
இரத்த நாளங்களை விடைக்க வைத்து
உறைய வைத்திடும்
முத்தங்களின் சுவையோ அலாதிதான்…

-சசிகலா திருமால்,
கும்பகோணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here