நாட்டுராணுவ வீரணுக்கு நல் இதயவேதனையை தாங்கும்சக்தி!

0
30

நாட்டை பாதுகாக்க வீட்டை மறந்து!!
நாட்டின் எல்லையில் பலநேரம் வீட்டின் நினைவில்லாது!!
நாட்கள் பலகடந்து இளமையும்கடந்தன!!
நல்துணை இணையாக !! நல் துணைவிழாவும் நடந்தன!
மல்லிகை வாசம் மறையுமுன்னே‌!! மங்கை அவளைபிரிய!
மரணவலியைவிட பெரிதென புரிய!!
காடளந்த‌ வீரனானேன்!!
கண்ணீர் அவள் வடிக்க! நினைவுநீங்கா தவிப்பிலானேன்!!
காசு பணம் இருந்தென்ன!! கம்பீரமாய்உடை அணிந்தென்ன!!
கனவிலும் நினைவிலும் கடந்த! இளமை பண்புகளின் நினைவுகள்! உருத்தலாய் வருவதென்ன!

என் குழந்தை க்குபாசம்காட்டி வளர்க்காத தந்தையானேன்!!
என் அருமை மனைவிக்கு! அருகமர்ந்து அன்புகூறமுடியா!! கணவனானேன்!!
மதுவேபழக்கமில்லாநான்!மதுகுடித்து
மனதால் மட்டும்சந்தோஷ நிலையிலானேன்!!

வனத்திற்குள் மரங்களையும், மான் களையும்!!
வானத்தின் நிலாவையும்! நடஷத்திரங்களையும்!!

மயில் களையும் குயில் களையும்!! குழந்தையாக நேசிக்கிறேன்!!
மனைவியாக வர்ணிக்ககூட நேரமில்லாது தவக்கிறேன்!!

நாட்டைகாக்கின்ற கட்டுப்பாட்டுச் சிறைக்குள்ளே!!
நாம் உலாவ அனுமதி இல்லே!!
நல்லிரவும் நண்பகலும் !நற் விழாக்காலமும் நமக்கில்லே!!

நல்கொடும்பனிக்கும் நல்கொடும் மழைக்கும்‌!ஒதுங்கிவாழ நிலையில்லே!!

நாட்டுராணுவ வீரணுக்கு நல் இதயவேதனையை தாங்கும்சக்தி!! கொடுப்பது!!
சொல்லமுடியா துயரை நாட்டுக்காக
தாங்கும்! தன்னம்பிக்கையே!!

#ஜெய்ஹிந்த் பாரமாத்தாக்கே ஜே..!
வந்நதே மாதரம்!!

-கவிதை மாணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here