நம்பிக்கை ஒரு போதும் தோற்பதில்லை.!

0
88

எனது அன்புக்குரியவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களுடன் சில வார்த்தைகளையும் உரிமையுடன் சொல்வது நான் உங்கள் சுரேஷ்வரன்.

பூமியை படைத்து
அதை உயிர்கள் வாழும் விதத்தில் வடிவமைத்து எல்லோருக்கும் பொதுவாக்கிய இறைவன்.. வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்ளும் உரிமையை மட்டும் அவரவர் வசமே கொடுத்து விட்டார்.

கடவுளுக்கு சந்தர்ப்பம் என்ற ஒரு புனை பெயர் உண்டு
கடவுள் இங்கே யாருக்கும் விஷேச கருணை காட்டி சந்தர்ப்பங்களை அனுப்பி வைப்பதில்லை.
யாருக்கும் விஷேசமாக ஜாதகம் எழுதி வைப்பதும் இல்லை.
இவன் அரசன்,
இவன் அறிஞன்,
இவன் மகான்,, என்று யாரையும் அடையாளப்படுத்தி அனுப்பி வைப்பதும் இல்லை.
அப்படியான சந்தர்ப்பங்களை மட்டும் அனைவருக்குமே பொதுவாகவே அனுப்பி வைக்கிறார்.
அனுப்பி கொண்டே இருக்கிறார்.

ஆனால் அந்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தி கொள்ளும் சமயோசித அறிவையும், ஆற்றலையும் மனிதர்களிடமே தான் கொடுத்திருக்கிறார்.

சந்தர்ப்பங்களை அடையாளம் கண்டு கொள்ளாமல் கை நழுவ விடுகிறவர்கள் பெயரும் புகழும் இல்லாமல் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து விட்டு தன்னை நம்பியிருப்பவர்களையும் வருமையிலேயே விட்டு விட்டு செல்கிறார்கள்.

சந்தர்ப்பங்களை அடையாளம் கண்டு சரியாக பயன்படுத்தி கொள்கிறவர்கள் சரித்திரத்தில் தங்கள் பெயரை எழுதி விட்டு செல்கிறார்கள்.

எல்லாருக்கும் பொதுவான பந்தி தான். அதில் உங்களுக்கும் ஒரு பாகம் உணவு இருக்கிறது.
நீங்கள் சாப்பிடவில்லையென்றால் இன்னொருவன் சாப்பிட்டு கொழுப்பான்.

எல்லாருக்கும் பொதுவான சந்தர்ப்பம் தான்.
அதில் உங்களுக்கும் ஒரு வாய்ப்பு இருக்கிறது நீங்கள் அதை பயன்படுத்தவில்லை என்றால் இன்னொருவன் பயன்படுத்தி செழிப்பான்.
இதுவே விதி!

தோல்வியில்லாமல் வெற்றி இல்லை!
தோல்வியை சந்திக்கமல் கிடைக்கும் வெற்றி நிலைப்பதே இல்லை.
தோல்வி அடைவது அவமானமல்ல.. தோழ்வியில் கற்றுக் கொள்ளாமல் இருப்பது தான் அவமானம்.
தோல்விக்கு நிஜமான பெயர் அனுபவம்

கம்பீரமாக தெரியும் அரண்மனைகளையும், மாட மாளிகைகளையும் தாங்கி நிற்ப்பது கரடு முரடான அஸ்திவாரங்கள் தான்.

அழகான பாதைகள் எல்லாம் அதற்க்கு முன்பு கரடு முரடானவைகள் தான்.

மாற்ற முடியாதது என்பது இங்கே எதுவுமே இல்லை

அப்பனை போலதான் பிள்ளை என்பதெல்லாம் வெறும் பேச்சு.
பனிரெண்டு வயதிலிருந்து பதினாறு வயது வரையில் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் ஆரோக்கியமான உணவு பரம்பரை மரபணுவையே மாற்றி விடும்.

தரமான கல்வி, அதற்கான சரியான திட்டமிடல்..
நீங்கள் நழுவ விட்ட சந்தர்ப்பங்களை உங்கள் குழந்தகளுக்கு சரியாக அடையாளம் காட்டுதல்.
உங்கள் அனுபவத்தினை அவர்களுக்கு முறையான பாடமாக்குதல்.
இப்படியான செயல்களை ஒரு தவத்தை போல செய்தாலே போதும் உங்கள் தலைமுறையின் அடையாளத்தையே மாற்றி அமைத்தது விட முடியும்.
மாற்ற முடியாதது என்பது இங்கே எதுவுமே இல்லை

மாற்றங்களுக்கு உங்களை உட்படுத்தாத வரையில் வளர்ச்சி என்பதும் இல்லை

எல்லாம் அவன் செயல் என்று விட்டு விடாதீர்கள்.
எல்லாம் விதி படி தான் நடக்கும் என நம்பி விடாதீர்கள்.
கடவுள் என்பது ஒரு நம்பிக்கை
மற்றபடி செயல் என்பதெல்லாம் உங்களிடம் தான் இருக்கிறது.

லாட்டரி மூலம் கோடீஸ்வரனாக வேண்டுமென நீங்கள் ஆசை பட்டால் முதலில் ஓடிப்போய் ஒரு லாட்டரி சீட்டை வாங்கி வர வேண்டும்.
அந்த செயலை நீங்கள் தான் செய்ய வேண்டும்.
அதில் பரிசை விழவைத்து கடவுள் உங்களை கோடீஸ்வரர் ஆக்குவார் என்பது நம்பிக்கை.

நீங்கள் செயல்களை தொடங்காமல் உங்கள் நம்பிக்கை ஒருபோதும் ஜெயிக்காது.
நீங்கள் செயல்களை தொடங்கிவிட்டால் உங்கள் நம்பிக்கை ஒருபோதும் தோற்க்காது.

யோசித்துக் கொண்டிருக்கும் வரையில் எல்லாமே தடைகளாய் தான் தெரியும்.
செயல்பட தொடங்கிவிட்டால் அவை அத்தனையும் சாதகமாய் அமையும்.
இதுவே விதியின் தத்துவம்.

சிகரம் தெரிந்தால் தான் பயணத்தை தொடங்குவேன் என காத்திருக்காதீர்கள்.
பயணத்தை தொடங்குங்கள் ஒரு நாள் சிகரத்தை அடைவீர்கள்.
இதுவே விதியின் தத்துவம்.

ஆகவே!
விதியென்பது எழுதப்பட்டதல்ல.
வகுக்கப்படுவது.!

எழுவோம் என்ற பலமான உங்களின் ஆழ்மன நம்பிக்கை தான் அடுத்த நாளில் உங்களை கண்விழிக்க வைக்கிறது.
அதுவே உங்களை ஆண்டாண்டு காலங்கள் வாழவைக்கிறது.

அதே பலமான ஆழ் மன நம்பிக்கை உங்களின் ஒவ்வொரு செயலிலும் இருந்துவிட்டால்…
வெற்றி என்ற முடிவை தவிர வேறெதுவும் நிகழ்ந்துவிட போவதில்லை.

நம்பிக்கையோடு தொடங்குங்கள்.
நம்பிக்கையோடு செயல்படுங்கள்.
நம்பிக்கை ஒரு போதும் தோற்பதில்லை.!

√ கூ, சுரேஷ்வரன்
எல் ஐ சி ஆப் இந்தியா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here