நடிகரும் இயக்குனருமான எஸ். வி. ரங்கராவ் பிறந்த நாள் ஜூலை 03

0
95

சாமர்லா வெங்கட ரங்கா ராவ் (S. V. Ranga Rao, ఎస్.వి. రంగారావు, ஜூலை 03 , 1918 – ஜூலை 18 -1974) ஆந்திர மாநிலத்தில் பிறந்த தென்னிந்தியத் திரைப்பட குணச்சித்திர நடிகராவார். நடிகராக மட்டுமல்லாது திரைப்படவுலகில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பங்காற்றியவர்.

வாழ்க்கை

இவர் தற்போதைய ஆந்திரப்பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள, நுஸ்வித் நகரில் 1918 சூலை 3ஆம் நாள் பிறந்தார். சென்னை இந்துக் கல்லூரியில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். இவர் 1949 ஆம் ஆண்டு மன தேசம் என்ற தெலுங்கு படத்தில் சிறுவேடத்தில் அறிமுகமானார். 1951 இல் இவர் மந்திரவாதியாக பாதாள பைரவி படத்தில் நடித்தபிறகு புகழ்பெற்ற நடிகராக ஆனார். தன் 25 ஆண்டு திரை வாழ்க்கையில் 53 தமிழ்ப் படங்கள், 109 தெலுங்குப் படங்கள் என அவர் 163 படங்களில் நடித்துள்ளார். இந்திய அரசு எஸ். வி. ரங்காராவை கௌரவப்படுத்தும் விதத்தில் அவரது அஞ்சல் தலையை 2013இல் வெளியிட்டது.

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

1950 – 1959
பாதாளபைரவி ‎(1951)
கல்யாணம் பண்ணிப்பார் (1952)‎
சண்டிராணி ‎(1953)
வேலைக்காரி மகள் ‎(1953)
ரோஹிணி (1953)
தேவதாஸ் (1953)
ராஜி என் கண்மணி ‎(1954)
துளி விசம் (1954)
குணசுந்தரி (1955)
மிஸ்ஸியம்மா ‎(1955)
மாதர் குல மாணிக்கம் (1956)
அலாவுதீனும் அற்புத விளக்கும் ‎(1957)
சௌபாக்கியவதி ‎(1957)
அன்னையின் ஆணை ‎(1958)
கடன் வாங்கி கல்யாணம் ‎(1958)
சபாஷ் மீனா ‎(1958)
சாரங்கதாரா ‎(1958)
பிள்ளைக் கனியமுது ‎(1958)
திருமணம் (1958)
பொம்மை கல்யாணம் (1958)
பிள்ளைக் கனியமுது (1958)
வாழ்க்கை ஒப்பந்தம் (1959)
ராஜ சேவை ‎(1959)
கலைவாணன் (1959)
அவள் யார் (1959)
1960 – 1969
இரும்புத்திரை ‎(1960)
படிக்காத மேதை ‎(1960)
பார்த்திபன் கனவு (1960)
விடிவெள்ளி ‎(1960)
குமுதம் (1961)
அன்னை ‎(1962)
தெய்வத்தின் தெய்வம் (1962)
படித்தால் மட்டும் போதுமா ‎(1962)
பக்த பிரகலாதா ‎(1967)
வீராஞ்சநேயா (1968 திரைப்படம்) (1968)
1970 – 1979
சம்பூரண இராமாயணம் (1971)

பெற்ற விருதுகளும், சிறப்புகளும்

சிறந்த நடிகர் விருது 1963 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடந்த இந்தோனேசியன் திரைப்பட விழாவில் ரங்கராவுக்கு வழங்கப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here