தொழிலாளர் தின நல் வாழ்த்துக்கள்..!

0
21

அமெரிக்காவில் தொடங்கிய
தொழிலாளர் புரட்சி வித்தே !
அகில உலக மேதின சொத்தே!
பரிணாம வளர்ச்சி தொட்டு!
பண்டைய மனிதனின் எழுச்சிதொட்டு!

பண்ணை விவசாயகூலி அடிமை தொட்டு!
பாரை போரில் வென்று பாமர மக்களை
அடிமையாக்கிய களகம் தொட்டு!

மனித கழிவை மனிதனே!
கையால் அள்ளும் அவலம் தொட்டு !!!
மானிட்டர் வைத்து வேலை செய்யும்
ஐடி ஊழியர்கள்தொட்டு!
வேலைப்பளுவை வேலை ஊதியத்தை!
நியாயப்படுத்தவும்!
வேலை வாங்கியோரை புத்தி புகட்டவும்!
எழுச்சியாய் மகிழ்ச்சியாய்
உழைப்பை மூலதனமாக்கி!!
ஏற்றம் பெற போராடும்
அனைவரும் கொண்டாடப்படும் தினமே
உழைப்பாளர்களின் வாழ்வில் மேன்மை
மே தினமே!

உழைப்பின் வியர்வை கடலாய் பெருக!!
ஊதியம் கடுகாய் சிறுக !!
உழைப்பவனை ஏளனமாய் பார்க்கும்!
முதலாளித்துவத்திற்கு எதிராய்!!

உரிமையை மீட்டெடுத்த புரட்சி புதிராய்!!
எல்லா தொழிற்சாலைகளிலும் எட்டு மணி நேரத்தை!
வேலை நேரம் ஆக்கி! போராடி உயிர் நீத்த!
தியாக செம்மல்களை என் நினைவு கூறவே!
உழைப்பு என்ற மூலதனம் இல்லாது
வனப்பு என்ற பூஞ்சோலை பூக்காது!!
இயந்திரமாய் உழைக்கும் மனிதனுக்கு
பதிலாக இயந்திரம் பயன்படுத்தி !!
மனித உழைப்பபை குறைத்தாலும்!!
இயந்திரத்தை இயக்குப வரும் !

ஒரு உழைப்பாளி!

உழைத்திடும் வர்க்கம் சிறக்க!!
ஏர் தொட்டு பாரை இயக்கும் தொழிலாளர் வரை!!
அனைவருக்கும் தொழிலாளர் தின நல் வாழ்த்துக்கள்!!
-கவிதை மாணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here