நினைக்கும் போதே
கண் முன் நிற்கும்
மாயபிம்பம்;
அமுத சுரபியாக
அன்பை மட்டுமே
பொழியும்
அட்சயபாத்திரம்;
மாயஜாலங்களால்
மனதை கொள்ளையடிக்கும்
புன்னகை ;
மழலை
மொழியால்
மெய் மறக்க
செய்யும் வசீகரம்;
எவ்வளவு
தொலைவில்
இருந்தாலும்
உன் அன்பிற்கு
குறையில்லை;
மொத்தத்தில்
நீ
எனக்கு
கடவுளால்
அனுப்பப்பட்ட
“ஒரு குட்டி
தேவதை”