தேசிய கைத்தறி தினம்

0
117

தேசிய கைத்தறி நாள், கைத்தறி நெசவாளர்களை நினைவுகூறும் வகையில் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இதற்காக சுதேசி இயக்கம் தொடங்கப்பட்ட ஆகஸ்ட் ஏழாம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.

கைத்தறியாடை இந்தியர்களின் பாரம்பரியத்தைக் குறிக்கின்றது. சிறுதொழிலான கைத்தறி நெய்தலில் கிட்டத்தட்ட 43 இலட்சம் மக்கள் ஈடுபடுகின்றனர். இது இந்தியாவின் ஊரகப் புறங்களில் அதிக வருமானத்தை தருகிறது. உலகெங்கும் உள்ள ஆடைகளில் கிட்டத்தட்ட 95% கைத்தறி ஆடைகள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.

செயல்பாடுகள்

2015ஆம் ஆண்டின் ஆகஸ்ட் ஏழாம் நாளில், இந்தியப் பிரதமரான நரேந்திர மோதி தேசிய கைத்தறி நாளை வரும் ஆண்டுகளில் இந்திய அரசு கொண்டாடும் என்று கூறி, கைத்தறித் துறைக்கான சின்னத்தை அறிவித்தார்.இவ்விழாவில் கைத்தறித் துறை தொடர்பான 72 விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழக முதல்வர் வாழ்த்து

‘நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த, தமிழக மக்கள் அனைவரும், துாய பட்டு, பருத்தி மற்றும் கைத்தறி உற்பத்தி ரகங்களை, வாங்கி அணிந்து, நெசவாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்’ என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்து உள்ளார்.

தேசிய கைத்தறி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள, வாழ்த்து செய்தி: உள்நாட்டு பொருட்களின் உற்பத்தி செயல்பாடுகளுக்கு, புத்துயிர் ஈட்டும் வகையில், சுதேசி இயக்கம், 1905 ஆகஸ்ட், 7ல் துவக்கப்பட்டது.

இதை நினைவு கூறவும், கைத்தறி நெசவாளர்களை கவுரவிக்கவும், 2015 முதல், ஆண்டுதோறும், ஆக., 7 தேசிய கைத்தறி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.ஜவுளித் தொழிலின் பல்வேறு உட்பிரிவுகளான, நுாற்பு பிரிவு, கைத்தறி நெசவு, விசைத்தறி நெசவு, பதனிடுதல், பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை ஆகிய அனைத்து பிரிவுகளிலும், தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. தமிழகத்தில், 1,133 தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், 2.46 லட்சம் கைத்தறிகளுடன் இயங்கி வருகின்றன.இவற்றில், பல்வேறு வகைப்பட்ட கைத்தறி துணிகள், ஆண்டுக்கு சராசரியாக, 1,050.16 கோடி ரூபாய்க்கு விற்பனையாகின்றன.

நெசவாளர்கள் நலனுக்காக, அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஊரடங்கு காரணமாக, நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள, 1.03 லட்சம் நெசவாளர்களுக்கு, இரண்டு தவணைகளாக, தலா, 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுஉள்ளது.

நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையில், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும், துாய பட்டு, பருத்தி மற்றும் கைத்தறி உற்பத்தி ரகங்களை, வாங்கி அணிந்து, நெசவாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.தேசிய கைத்தறி தினத்தையொட்டி, தமிழகத்தில் உள்ள கைத்தறி நெசவாளர்கள் மற்றும் தொழில் சார்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here