தென்திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையாா் உடனுறை உண்ணாமலையம்பாள் திருக்கோவில் தீபத்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

0
214

தென்காசி மாவட்டத்தில் தென்திருவண்ணாமலையாக பிரபலமடைந்து வரும்
அருள்மிகு அண்ணாமலையாா் உடனுறை உண்ணாமலையம்பாள் திருக்கோவில் தீபத்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
மாலை 6 மணியளவில் மலைமேல் தீபமேற்றப்பட்டு அதனைத்தொடா்ந்து
அண்ணாமலையாா் உடனுறை உண்ணாமலையம்பாளுக்கு சிறப்பு பூஜையும் இரவு 9மணியளவில் தேரோட்டம் மற்றும் வானவேடிக்கையும் நடைபெற்றது.


அதனைத் தொடா்ந்து இரவு 12 மணியவில் பெரியசாமிச் சித்தரின் வாக்குப்படி ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இருவா் (ஆனந்த் மற்றும் அருணாச்சலம்) தலையிலும் துளசி மாலையால் தீபச்சுடா் ஏற்றப்பட்டு ஒவ்வொரு வீடாகச் சென்று தீபச்சுடா் மீது எண்ணெய் வாங்கி ஆசி வழங்கினா்.


சுமாா் 7 மணி நேரம் இந்த நிகழ்வு நடைபெற்று காலை 7 மணியளவில் தீபச்சுடா் பெரியசாமிச் சித்தரின் ஜீவ சமாதிக்குள் இறக்கி வைக்கப்பட்டது. தீபத் திருவிழாவிற்கு திரளான பக்த கோடிகள் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here