டி. ஆர். பாப்பா என அழைக்கப்படும் திருத்துறைப்பூண்டி இராதாகிருஷ்ணன் பாப்பா (ஜூலை 3 , 1923 – 15 அக்டோபர் 2004) தமிழக வயலின் இசைக் கலைஞரும், திரைப்பட இசையமைப்பாளரும், ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, சிங்களத் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
சிவசங்கரன் என்ற இயற்பெயர் கொண்ட பாப்பா திருவாரூருக்கு அருகில் உள்ள திருத்துறைப்பூண்டியில் பிறந்தவர். தந்தை இராதாகிருஷ்ண பிள்ளை ஒரு வயலின் கலைஞர்.
குறிப்பிடத்தக்க சில பாடல்கள்
சின்னஞ்சிறு பெண் போல சிற்றாடை
ஆசை பொங்கும் அழகு ரூபம் -அன்பு – எ .எம் .ராஜா-ஜமுனாராணி
வருவேன் நான் உனது வாசலுக்கே -மல்லிகா
ஒண்ணுமே புரியல உலகத்திலே -குமாரராஜா
இரவும் வரும் பகலும் வரும் – இரவும் பகலும்
உள்ளத்தின் கதவுகள் கண்களடா – இரவும் பகலும்
கத்தியை தீட்டாதே – விளக்கேற்றியவள்
குத்தால அருவியிலே -நல்லவன் வாழ்வான்
சிரிக்கின்றான் இன்று சிரிக்கின்றான் – நல்லவன் வாழ்வான்
ஆண்டவன் ஒருவன் -நல்லவன் வாழ்வான்
இருமாங்கனிபோல் இதழ் ஓரம் -வைரம்
முத்தை தரு பத்தி -அருணகிரி நாதர்
ஏடி பூங்கொடி ஏனிந்த பார்வையோ -மறுபிறவி
அம்மா என்பது முதல் வார்த்தை – டீச்சரம்மா
இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
மாப்பிள்ளை (1952)
ஆத்மசாந்தி மலையாளம்
அன்பு (1953)
அம்மையப்பன் (1954)
குடும்பவிளக்கு (1956)
ரம்பையின் காதல் (1956)
ராஜா ராணி (1956)
ஆசை (1956)
ரங்கோன் ராதா (1956)
மல்லிகா (1957)
தாய் மகளுக்கு கட்டிய தாலி ( 1959 )
குறவஞ்சி (1960)
விஜயபுரி வீரன் (1960)
நல்லவன் வாழ்வான் (1961)
குமார ராஜா (1961)
எதையும் தாங்கும் இதயம் (1962)
சீமான் பெற்ற செல்வங்கள் (1962)
அருணகிரிநாதர் (1964)
இரவும் பகலும் (1965)
காதல் படுத்தும் பாடு ( 1966)
பந்தயம் ( 1967 )
டீச்சரம்மா ( 1968 )
அவரே என் தெய்வம் (1969)
ஏன் (1970)
அருட்பெருஞ்ஜோதி (1971)
மறுபிறவி ( 1972)
அவசர கல்யாணம் (1972)
வைரம் (1974)
வாயில்லாப்பூச்சி (1976)
விருதுகள்
இசைப்பேரறிஞர் விருது, 1996. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை