திரைக்கு வரும் முன்பே ரூ. 100 க்கு பிசினஸ் ஆன சூரரைப் போற்று !

0
59

திரைக்கு வரும் முன்பே ரூ. 100 க்கு பிசினஸ் ஆன சூரரைப் போற்று ! டுவிட்டரில் ஹேஸ்டேக்

நடிகர் சூர்யா நடித்து அவது தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “சூரரை போற்று”. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரக்குகள் மூடப்பட்டுள்ளதால் படம் வெளியாவது ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் சூரரை போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் இந்த படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் சூர்யாவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் இப்படம்
திரையிடும் முன்பே ரூ. 100 கோடி அளவில் பிசினஸ் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இது சூர்யா ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே
சூர்யா ரசிகர்கள் ட்விட்டரில் #SooraraiPottruHits100crPB என்ற ஹாஸ்டேக்கை டிரெண்டாக்கி வருகிறார்கள்.

#SooraraiPottru Bags 100 Core Pre Business

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here