திருச்செந்தூருக்கு மிகச்சிறப்பு இன்று 06/09/2020 அதிகாலை ஆவணித்திருவிழாவை முன்னிட்டு செப்புக்கொடிமரத்தில் முருகப்பெருமானுக்கு கொடி ஏற்றப்பட்டது..
அதனைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்கள் தீபாராதனையும் நடைபெற்றது..
கொரோனா காரணத்தை முன்னிட்டு பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை
இன்று முதல் திருவிழாவிலிருந்து பன்னிரண்டாம் திருவிழா வரைக்கும் கோயில் உள்பிரகாரத்தில் அனைத்தும் திருவிழாக்கள் நடைபெறும்…
முக்கிய திருவிழாவான 10/09/2020 ஐந்தாம் திருவிழா குடைவரை வாயில் தீபாராதனை நடைபெறும்..
12/09/2020 ஏழாம் திருவிழா காலையில் வெற்றிவேர் சப்பரத்தில் சண்முகபெருமான் எழுந்தருளித்தல். மாலையில் சிவப்புச்சாத்தில் வருவார்..
13/09/2020 எட்டாம் திருவிழா அன்று காலையில் வெள்ளை ச்சாத்தி சப்பரத்திலும் அதனைத்தொடர்ந்து பச்சைச்சாத்தியில் எழுந்தருளித்தல்..
15/09/2020 அன்று அதிகாலையில் தேரரோட்டம் நடைபெறும் திருவிழாக்கள் அனைத்தும் கோயில் நிர்வாகத்தினரால் நடைபெற்றுவருகிறது..
திருச்செந்தூர் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரை ஓரமாக அமைந்துள்ளது..