தாய்மை

0
117

இல்லற பாசத்தில் இன்பத்தின்,இருவர்பாரம் இது!
இதை நினைத்து வளர்க்கையில்
இன்பஎன்தாயின் நினைப்பூறுது!

துள்ளியோடும் வீரனோ?
துவண்டுபோகும் பெண்மானோ? என்னுள்ளே!
பத்து மாதம் உனைச்சுமக்க! நித்தம் நான் படும் துயரம்!
பூமித்தாயை நினைக்கமிஞ்சும் பெண்மையின் துயரம்!

கணவனால் ஏற்றியதீபம்!
காற்றும் தீண்டாது!
காத்துக் கொடுத்து!
கண்முன்னே அரங்கேற்றும் வரை!

இவள் கண்ணுக்கும் உறக்கம் ஏது !
இவள் நாவிற்கு சுவை ஏது! மௌனமாக
ராகம்மீட்டுவாள்! வலியாலே! வளமைகூட்டுவாள்!
வலம் வரசிரமப்படுவாள்!

அவள் சிசுவின் அழுகையிலே
ஆனந்த யாழ் மீட்டுவாள்!
அன்பு நெறியூட்டி அன்னையென உண்மை(மை) தீட்டி!

அழகோவிய மாய்வார்த்தெடுப்பவளே!
தலைபிரசவத்தில்
பெண்மை இருபிறவி காண்கிறாளே!
         -கவிதை மாணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here