தாய்பால் உணவூட்டல்

0
101

உலக தாய்ப்பால் வாரம் – ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 7 வரை

அறிமுகம்

குழந்தையின் வளர்ச்சி முதல் 6 மாதங்கள் வேகமாக இருக்கும். பிறந்த எடையை விட இரண்டு மடங்கு 5 மாதங்களிலும், மூன்றுமடங்கு ஒரு வருடத்திற்குள்ளாகவும் இருக்கும் போதுமான செவிலிய பராமரிப்பு தேவை. தாய்பால் ஆனது, சீக்கிரமாகவே செரிக்கக் கூடியதும் உறிஞ்சுக் கொள்ள கூடியதாகும்

தாய் பால் முக்கியமானது

எல்லா குழந்தைகளுக்கும் எந்த வகை பிரசவமாயிருந்தால் குழந்தைகளுக்கு தாய்பாலே சிறந்தது. 6 மாதம் வரை தாய் பால் தவிர மற்ற எந்த உணவையும் சேர்க்க கூடாது.

தாய்பால் கொடுக்கும் போது உடலியல் மாற்றங்கள்

தாய்பால் பிரசவத்தின் பின் கொடுக்கப்படுகிறது. கர்ப்பகாலத்திலே பால் சுரக்க ஆரம்பிக்கிறது.

a) மார்பகங்களை தயார்படுத்துதல் வேண்டும். (மமோஜெனிசிஸ்)

b) மார்பக காம்பிலிருந்து திரவம் வெளியாதல் (லாக்டோஜெனிசிஸ்

C) பால் வெளியேறுதல் (கேலக்டோகைனேசிங்)

d) பால் சுரப்பது பராமரிக்கப்பட வேண்டும் (கேலக்டோபாய்சிஸ்)

மமோஜெனிசிஸ்

கர்ப்பகாலத்தில் மார்பகத்தில் உள்ள லோபுலார் மற்றும் மார்பக திசுக்கள் வளர்ச்சியடைய ஆரம்பிக்கிறது. கர்ப்ப காலத்திலேயே பால் சுரக்க ஆரம்பிக்கிறது.

லாக்டோஜெனிசிஸ்

கர்ப்பகாலத்தில் சில சுரப்பிகள் சுரக்க ஆரம்பிக்கிறது. பால் சுரப்பது 3-4 பிரசவத்திற்கு பின் ஏற்படுகிறது. இதன் காரணம் ஈஸ்டோராஜன் சுரப்பதால், புரஸ்ட்ரோன் மார்பக திசுக்களை புரலாக்டின் உற்பத்தி செய்ய உதவுகிறது. புரலாக்டின் பால் சுரக்கும் போது மார்பக சுரப்பிகள் முன்னேறுவதற்கு வழி வகுக்கிறது.

கேலக்டோ கைநேஸ்

தாய்ப்பால், பால் சுரப்பிகளிலிருந்து வெளிப்படுகிறது. குழந்தை உறிஞ்சிக் குடிக்கும் போது பால் ஆனது ஆல்வியோலை வழியாய் வெளியேறுகிறது.

கீழே தள்ளப்பட வெளியேறும் பாலின் தன்மைகள்

* மார்பக காம்பிலிருந்து ஆரியோலா வழியாக கீழ்நோக்கி உறிஞ்சப்படும் தூண்டுதல் மூலமாக வெளியேறுதல்.

* மார்பு பகுதியிலுள்ள தூண்டப்பட்ட நரம்புகளால்

* பாரா வென்டிரிகுலார் மற்றும் அப்புரா ஆப்டிக் நீயூக்லினான ஹைப்போ தலாமஸ்

* ஆக்ஸிடோசின் சிதைவடைந்து பின்புறமுள்ள பிட்யூரிடிரி மூலம் கடத்தப்படுகிறது.

• ஆக்ஸிடோசின் அடுங்கு நடுபுறத்திலுள்ள எபிதீலிய செல்கள் மூலம் ஆல்வியோலை மற்றும் அஸ்கள் அரப்புகளுக்கு பாலை கடத்துகிறது.

• பால் வேகமாக ஆம்ப்யூலாவிற்கு கீழ்நோக்கி உள்ள பால் தள்ளப்படுகிறது.

கீழே வெளியேற்றப்பட்ட பால்

குழந்தை வாய் வைக்கும் போதும், இளம் குழந்தை அழும்போதும் பால் வெளியேற்றப்படும் உணர்ச்சி ஏற்படுகிறது.

கேலக்டோபாய்ஸிஸ் தொடர்ந்து போதுமான அளவு தாய்பால் புகட்டுவதற்கு உதவுகிறது. உறிஞ்சி குடிப்பதற்கும், போதுமான அளவில் சுரப்பதற்கு (அ) உணர்ச்சிகளாலும் ஏற்படும். பால் உற்பத்தி பாலின் அழுத்தம் குறைவதினால் உற்பத்தி குறையப்படுகிறது. அப்படி குறையாமல் சுரப்பதற்கு பயன்படுகிறது.

ஆரம்பநிலை தாய்பால் புகட்டல்

தாய்பால் குழந்தை பிறந்த அரைமணி நேரத்தில் கொடுக்கப்பட வேண்டும் (அ) எவ்வளவு முடியுமோ எவ்வளவு சீக்கிரத்தில் கொடுக்க வேண்டும். உடனே கொடுக்கலாம் அறுவை சிகிச்சை முறையில் பிரசவம் இருந்தால் 4 மணி நேரம் கழித்து தாய்பால் கொடுக்கப்பட வேண்டும். குழந்தை குடிக்க ஆரம்பிக்கும் போது குழந்தைக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் கொலஸ்ட்ரத்தின் மூலம் குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.

தாய்பாலின் வகைகள்
கொலஸ்ட்ரம்

முதல் 3 நாட்களுக்கு இந்த கொலஸ்ட்ரம் சுரக்கிறது. மஞ்சள் நிறமாகவும் சிறிதளவு மட்மே சுரக்க கூடியது. இது அதிக அளவில் நோய் எதிர்ப்புகுரிய செல்கள் காணப்படுகிறது. அதில் புரதம், கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க கூடிய அளவில் காணப்படுகிறது.

மாற்றப்பட்டபால்

கொலஸ்ட்ரத்தை தொடர்ந்து முதல் இரண்டு வாரங்கள் பாலின் நிறம் மாறுகிறது. இதில் அதிக அளவு கொழுப்பு மற்றும் சர்க்கரை புரதம் மற்றும் இமினோகுளோபிளின் உள்ளது.

முழுமையாக்கப்பட்டபால்

இது 10 – 12 நாட்கள் பிரசவத்திற்கு பின் சுரக்கிறது. தண்ணியாக இருக்கும். ஆனால் எல்லாவித சத்துகளும் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான அளவு கிடைக்கிறது.

ஃபோர் பால்

தொடர்ந்து தாய்பால் கொடுக்கப்படும்போது சுரக்கப்படுகிறது. மிகவும் தண்ணியாகவும் ஆனால் குழந்தையின் தாகத்துக்கு ஏற்றாற்போல் கிடைக்கிறது. இதிலும் அதிக அளவில் புரதம், சர்க்கரை வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் உள்ளன.

ஹின்ட் பால்

தாய்பால் கொடுக்க ஆரம்பிக்கும்போது இது சுரக்கிறது. அதிக கொழுப்பு மற்றும் சக்தி கிடைக்கிறது. ஒரு பக்கத்தில் பால் கொடுக்கும் போதே இன்னொரு பக்கத்திற்கு தேவையான போர்பால், ஹின்ட்பால் சுரக்க ஆரம்பிக்கிறது.

தாய்பால் கொடுப்பதன் முறைகள்

தாய் வசதியாகவும், ஒய்வுடன் கூடிய வகையிலும் மனதளவில் ஒய்வுடனும் தாய்ப் பால் கொடுக்கப்பட வேண்டும். பால் கொடுப்பதற்கு முன் கைகளை நன்கு கழுவ படவேண்டும். தாய் பால் கொடுப்பதற்கு முன் 1 டம்ளர் தண்ணீர் (அ) பால் அருந்திவிட்டு கொடுக்கப்பட வேண்டும்.

குழந்தை சுத்தமாகவும் ஈரமில்லாமலும் இருத்தல் வேண்டும் அப்போதுதான் குழந்தை வசதியாகவும் மற்றும் ஒத்தழைப்பும் தரும்.

தாய்பால் கொடுக்கும்போது வேண்டிய நிலை

• வசதியான (அ) சாய்ந்த நிலை அமர்ந்து கொடுக்கப்படவேண்டும்.

• ஒரு கையால் குழந்தையை அணைத்துகொண்டு குழந்தையை மெல்லிய தலையணை அல்லது போர்வையை நான்காக மடித்து அதை அடியில் வைத்து தாங்கிபிடித்து கொடுக்கப்பட வேண்டும்.

* குழந்தையை மெல்லிய தலையணை அல்லது போர்வையை நான்காக மடித்து அதை அடியில் வைத்து தாங்கிபிடித்துக் கொள்ள வேண்டும்.

* கையில் வைத்து பிடித்துக் கொள்ளும் போது குழந்தை விழாமல் தாங்கி பிடிக்காலம்.

• குழந்தையின் வாய் விரிவாய் திறந்திருக்கும் போது மார்பகத்தில் வைத்தால் சுலபமாக உறிஞ்சி குடிக்க முடியும்.

பொதுவான நிலையில் தாய்பால் கொடுக்கப்படும்போது

* குழந்தையின் பின்புறம் மற்றும் தோள்பட்டை உள்ளங்கையில் தாங்கிபிடிக்க வேண்டும்.

* குழந்தையின் உடல் பகுதிக்கு கீழ் கையை வைத்து அவற்றின் தோள் பட்டை மற்றும் இடுப்பு பகுதி நேராக வைக்கப்படவேண்டும்.

• மார்பகத்தை தாங்கி பிடித்து குழந்தையின் வாய் அருகே வைக்க வேண்டும் அப்போதுதான் குழந்தையால் நன்றாக உறிஞ்சி குடிக்க முடியும்.

தொட்டில் முறை

• தொட்டில் முறையில் குழந்தையை சேர்த்தணைத்து அதன் தலைப்பகுதி தாயின் முழுங்கைகளில் குறுக்காக கிடக்குமாறு வைக்கப்பட வேண்டும்.

• குழந்தையின் வயிறு பகுதி தாயின் வயிற்றுப்பக்கம் இருக்குமாறு வைக்கப்பட வேண்டும்.

• மறுகையால் மார்பு பகுதியை தாங்கி பிடித்து கொடுக்க வேண்டும்.

படுக்கும் நிலையில்

* ஒரு பக்கமாக ஒருகளித்து குழந்தையும் ஒருகளித்து படுக்க வைத்து கொடுக்க வேண்டும். அப்போதுதான் ஒருவர் ஒருவர் முகத்தை பார்க்க முடியும்.

• கொடுப்பதற்கு முன் குழந்தையை முழங்கையால் தாங்கி பிடித்து மறுகையால் மார்பகத்தை கொடுக்கப்பட வேண்டும்.

குறுக்காக மடிமேல் படுக்க வைத்தல்

• தலையணை மீது குழந்தையை வைத்து மடியில் படுக்க வைக்கவேண்டும்.

• குழந்தையின் முகம் தாயைப்பார்த்து வைக்க வேண்டும்.

* குழந்தையின் தலை, தோள்பட்டை தாயின் உள்ளங்கையால் இறுக்கப்படவேண்டும்.

• குழந்தையின் வாய்ப்பகுதி தாயின் மார்பின் காம்பின் பகுதியில் வைக்க வேண்டும்.

மார்பகத்தை பிடித்தல்

• மார்பகத்தை இரண்டு விரலால் அழுத்தி Nipple பகுதியை குழந்தையின் வாயில் வைக்க வேண்டும்.

* கையை ஆரியோலாவிற்கு பின்னால் வைக்க வேண்டும்.

* குழந்தையின் உதடு தாயின் காம்பின் மீது இருக்கும்படி இருக்க வேண்டும்.

* தாயின் காம்பை குழந்தையின் உதடு தொட்டவுடன் நாக்கு வெளியே வந்தவுடன் குழந்தை பாலை ஊறிஞ்ச ஆரம்பிக்கிறது. மார்பக காம்பை உள்ளிருந்து குடிக்கிறது.

* குழந்தைகளுக்கு முதலில் உறிஞ்சு குடிப்பதற்கு செவிலியரின் உதவித்தேவை.

பிறகு குழந்தை தானாகவே உறிஞ்ச ஆரம்பிக்கிறது. குழந்தையின் வாய் சரியான முறையில் விரிவாக திறந்திருக்கிறதா என்று சரிப்பார்த்துக் கொள்ள வேண்டும். காம்பு பகுதி முழுவதும் குழந்தையின் வாயில் உள்ளதா, குழந்தையின் முகவாய் கட்டை மார்பகத்தை தொட்டு கொண்டு இருக்கிறதா குழந்தைளின் கண்கள் தாயை பார்த்து உள்ளதா? என்பதை உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும். கீழ் உதடு முழுவதும் ஆரியோலோவை அதாவது காம்பு பகுதியை மூடி உள்ளதா என்று பார்க்க வேண்டும். தாய்க்கு குழந்தை தாயுடன் இணைந்திருப்பதை உணர்த்துகிறது அல்லது பிணைப்பு ஏற்பட்டு உள்ளது என்பதை அறிய முடிகிறது.

தாய்பால் கொடுக்கப்பட வேண்டிய நேரங்கள்

• ஆரம்பித்தில் தாய்பால் 1-2 மணிநேர இடைவெளிகளில் தேவைக்கேற்ப கொடுக்கப்படவேண்டும்.

* குழந்தை திருப்தி அடையும் வரை தொடர்ச்சியாக கொடுக்கப்படவேண்டும். 20 நிமிடங்கள் ஒரு மார்பகத்திலும் அடுத்த பக்கத்திலும் கொடுக்கப்படவேண்டும்.

ஏப்பமிடுதல்

ஏப்பமிடுதல் என்பது குழந்தை குடித்த பால் மூச்சு குழலில் சென்று விடாமல் இருக்க உதவுகிறது. ஏப்பமிடுதல் ஒவ்வொரு முறையும் தாய்ப்பால் கொடுத்துவிட்ட பிறகும் செய்யப்பட வேண்டும். குழந்தையின் முதுகு புறம் ரொம்ப மெதுவாக தட்டப்பட வேண்டும். ஏப்பம் விடும் வரை (அல்லது) சில நொடிகள்.

தாய்பாலின் நன்மைகள்

* தாய்ப்பாலில் அதிக ஊட்டசத்து உள்ளது குழந்தையின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் 4-6 மாதங்கள் தாய்பால் அவசியம்

*தாய்ப்பாலில் உயர்ந்த சதவீத லாக்டோஸ், கலட்டோஸ் அதிக அளவில் உள்ளதால் இளம் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.

* உடல் வளர்ச்சிக்கான சுண்ணாம்பு சத்து அதிக அளவில் தாய்பாலில் இருக்கிறது.

* இதில் அமினோ அமிலம் டாயூரின் மற்றும் சிட்டரின் உள்ளது. இது உணவு பரிமாற்றத்திற்கு மிகவும் உதவுகிறது.

* தாய்ப்பாலில் உள்ள கொழுப்புகள் பாலிசாச்சுரேட்ஸ் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நரம்புகளின் மைலேஷனுக்கு மிகவும் உதவுகிறது.

* இளம் குழந்தைகளுக்குத் தேவையான விட்டமின்கள், தாது உப்புக்கள் எலக்ரோலைட்கள் சரியான அளவில் அமைந்துள்ளது.

* தாய்ப்பாலில் போதுமான கலோரிகள், கொழுப்புகள், தாது உப்புகள் மற்றும் விட்டமின்கள் இருப்பதால் இளம் குழந்தைக்கு தேவையான அளவு கிடைக்கிறது.

* தாய்ப்பால் சீக்கிரமாகவே ஜீரணிக்க கூடிய தன்மை உடையது புரதமான லாக்டோபுரதம் மற்றும் லாக்டோகுளோபின் சீக்கிறமாக ஜீரணிக்க கூடிய தன்மைக் கொண்டது. இங்கு குழந்தைகளுக்கு பேதி ஆவது தடுக்கப்படுகிறது.

பாதுகாக்கப்பட்ட மதிப்பிடு

• தாய்ப்பாலில் 1gA, 1gM, மாக்ரோபேஜஸ், லிம்போசைட்ஸ், பைபிடஸ் காரணிகள் லாக்டோபெரின், லைசோசோம் உள்ளது. தாய்பால் கொடுப்பதால் வயிற்றுப் (Gastrointestional) பிரச்சனை மற்றும் சுவாச கோளாறுகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

* தாய்ப்பால் மலேரியாவிற்கு எதிரான பாதுகாப்பு தருகிறது. வைரஸ் மற்றும் நுண்ணுயிரிகள் பாக்டீரியாக்களால் ஏற்படும் நோய் தொற்றுகளான தோல்வியாதி, செப்டி சீமியாவிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

* தாய்ப்பால் குழந்தைகளை, ஓவ்வாமை, மற்றும் ஆஸ்துமா அதுமட்டுமில்லாமல் இரணஜன்னி, ஹைப்போகால்சிமியா வைட்டமின் E மற்றும் துத்தநாக குறைப்பாடுகளை தடுக்கிறது.

EBM கொடுப்பதின் மூலம், சத்துணவு குறைபாடு, அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, அல்சர்ரைட்டிவ் கொலைட்டிஸ் மற்றும் குழந்தைகளுக்கு வரும் லிம்போமா போன்றவற்றின் அளவு குறைக்கப்படுகிறது.

உளவியல் நன்மைகள்

* தாய்பால் கொடுப்பதின் மூலம் தாய்க்கும் சேய்க்கும் ஒரு பாசப் பிணைப்பு மற்றும் தோலுடன் தோல் உரசுவதால் ஒரு கவனிப்பு மற்றும் ஒத்த உணர்வு ஏற்படும்.

• குழந்தை மற்றும் பெற்றோர்களிடையே பாசப்பிணைப்பு ஏற்படும்.

* குழந்தைகளுக்கு புத்திசாலித்தனமும் மற்றும் பாதுகாப்பான உணர்வுகளும் ஏற்படுகிறது.

தாய்மார்களுக்கு ஏற்படும் நன்மைகள்

* தாய்பால் கொடுப்பதின் மூலம் பிரசவத்திற்கு பின் ஏற்படும். இரத்தப்போக்கை கட்டுபடுத்தவும், கர்ப்பப்பையை திரும்பவும் பழைய நிலைக்கு வருதற்கும் உதவுகிறது.

* அடுத்த ஆறு மாதங்களில் ஏற்படும் கர்ப்பத்தை தடுக்கிறது. தாய் பால் கொடுப்பதின் மூலம் மார்பக மற்றும் ஒவேரியன் புற்றுநோய் தடுக்கப்படுகிறது.

* கர்ப்பகாலத்தில் உண்டாயிருந்த அதிகப்படியான கொழுப்புகள் தாய்பால் கொடுப்பதின் மூலம் குறைக்கப்படுகிறது.

• தாய்பால் கொடுப்பதன் மூலம் தாய்மார்களுக்கு வசதியும் சிக்கனமும் ஏற்படுகிறது.

* தாய்மார்கள், புதிய, சுத்தமான மற்றும் சுத்தம் செய்யப்பட்ட பால் சரியான வெப்பநிலையில் ஏற்ற விதத்திலும் தயாரிக்கப்படாமலும் குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகிறது.

குடும்பம் மற்றும் சமுதாய நலன்கள்

• தாய்பால் சிக்கனமான முறையில் மற்றும் சக்தியை பாதுகாக்கிறது.

• பால் வாங்குவதற்கு குறைந்த செலவு, உடல் நல பராமரிப்பு மற்றும் நோயற்ற வாழ்க்கை

தாய்பால் கொடுக்க கூடாத தாய்மார்கள்:

தாய் நோயுற்றிருந்தல் தாய்பால் கொடுக்க கூடாது.

தாய்பால் கொடுப்பதற்கு முன் கொடுக்க கூடாதவை

உணவூட்டலுக்கு முன்பு தண்ணீர், தேன் மற்றும் சர்க்கரை தண்ணீர் கொடுக்க கூடாது அவை உறிஞ்சி குடிப்பதை குறைக்கும், பேதி மற்றும் புழுக்கள் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.

வேலை செய்யும் தாய்மார்களுக்கான தாய்பால் புகட்டும் முறை (பாலை வெளியில் எடுத்து வைத்தல்)

* தாய்மார்கள் தாய்ப்பாலை சுத்தமான முறையில் வெளியே எடுத்து அதை ஒரு மூடியுள்ள பாத்திரத்தில் எடுத்து வைத்து, குழந்தை காப்பாளரிடம் தாய் இல்லாத சமயத்தில் கொடுக்கச் சொல்ல வேண்டும்.

* வெளியில் எடுக்கப்பட்டதாய்பால் அறை வெப்பநிலையில் 8 மணி நேரமும் குளிர்சாதனப் பெட்டியில் 24 மணி நேரமும் வைக்கலாம்.

* வெளியில் எடுக்கப்பட்ட தாய்பாலை பாலாடை மற்றும் தேக்கரண்டியில் வைத்து குழந்தைக்கு கொடுக்கலாம். இதுவே குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. தாய்ப்பால் கொடுப்பது எப்போதும் நல்லது என்பதை கூறவேண்டும். தாய்ப்பால் கொடுக்க உற்சாகப்படுத்தவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here