தானத்தில் கடவுளை மிஞ்சிய மனித கர்ணன்..!

0
57

“அறம் செய்ய விரும்பு”!

அறம் பொருளாகவோ! அருளாகவோ!!
அன்பாகவோ! அகிம்சை யாகவோ!
அவரவர் கொடுக்கின்ற மனதை போன்றது!!
அறிவுரை கூறுவது கூட! அறச்செயலானது!!

மாதா ,பிதா ,குரு தெய்வம்!
மாத பெற்றகுழந்தையை பிதாவிடம்சேர்க்க!
பிதா குருவிடம் சேர்க்க!!
குருகண்ணிற்கு தெறியா! இறைவனிடம்சேர்க்க!
நலம் பயக்கும் மனித இனம்!!

மாதா கை விட! பிதாவும்கைவிட!
குருவும்சபித்துவிட!!
மதியால் தெய்வகண்ணன்!! புண்ணியத்தை நன்கொடையாய் பெற்றுவிட!!

உயிர் போகும் தருணத்திலும்!! உருக்கமாய்,,!
உதிரம் சொட்டச்சொட்ட! புண்ணியத்தை கொடையாகப்பெற!

கண்ணன் கையைந்திநிற்க! கர்ணன் செய்த அறத்தால்!!
கண்ணன் என்ற தெய்வத்தை விட!! உயர்நிலை அடைந்த மனிதகர்ணன்!!

அறம் செய்ததால் அறக்கடவுளையும் மிஞ்சி புண்ணியத்தால் அறம்வென்றது!!
-கவிதை மாணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here