தரையில் பூத்த வெண்தாமரை…

0
30

தண்ணீரில் பூத்ததோ வெண்தாமரை?!
தரையின் மேலொரு செந்தாமரை?!
பூவே பூக்கள் எடுத்துப் பொலிவுடன்
பூஜைக்குப் புறப்பட்ட கோலமோ?!

பெண்தாமரை காலெடுத்து நடக்கும் முன்னே தண்ணீர்க் காதலன் தனக்கு
வேண்டுமென்று அவளை நகலெடுத்துக்
கொண்டா(டினா)னோ?! அவள் சிரிப்பில்
திண்டாடினானோ!? யாரறிவார்??

சுத்தமல்லி உமாஹரிஹரன் திருநெல்வேலி.
05/05/2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here