தரையில் உதிக்கும் விண்மீன்கள்…

0
23

தரையில் உதிக்கும் விண்மீன்கள்…

வான்மகள் வந்திறங்கிய
வதனமதில்
நிலவொளியின் பிரதிபலிப்பாய்
பளிச்சிடும் பளிங்கு விழிகளில்
ஜனகனின் வில்லென
வளைந்த புருவங்களின் மத்தியில்
ஒற்றை புள்ளியாய் நீயிட்ட திலகமது
தரையில் உதித்த விண்மீனென
உண்டாக்கிச் செல்லும் ஒளிதனில்
என் மனம் பறிக்கும்
மாயம்தான் என்னவோடி பெண்ணே…

-சசிகலா திருமால்,  கும்பகோணம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here