தமிழ்த் திரைப்படங்களும் சாதனைகளும்

0
103

தமிழ்த்திரையுலகின் முதல் பேசும்படம்

1931 ஆம் ஆண்டு அக்ட்டோபர் மாதம் 31 ஆம் திததியில் வெளிவந்த காளிதாஸ் தமிழில் வெளிவந்த முதல் பேசும் திரைப்படமாகும்.

அதிக நாட்கள் ஓடிய திரைப்படம்

1944-ல் வெளிவந்த ஹரிதாஸ் தமிழில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படமாகும். தொடர்ந்து 110 வாரங்கள் திரையில் காண்பிக்கப்பட்ட மிகப்பெரும் சாதனைப்படமாக இத்திரைப்படம் விளங்குகின்றது. தியாகராஜ பாகவதர் நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் 16-10-1944 முதல் 22-11-46 வரை தொடர்ந்து திரையில் காண்பிக்கப்பட்டது. ராயல் டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்ட இத்திரைப்படம் சென்னை ப்ராட்வே திரையரங்கில் தொடர்ந்து மூன்று தீபாவளி நாளைக் கண்டது.

ஒரு நாளில் எடுக்கப்பட்ட திரைப்படம்

பதினொரு இயக்குனர்கள் 12 கதாநாயகர்கள் 8 கதாநாயகிகள் இணைந்து நடித்து 24 மணி நேரங்களிலேயே எடுக்கப்பட்ட சுயம்வரம் என்னும் தமிழ் திரைப்படம் உலக சாதனை புத்தகமான கின்னஸ் இல் பதிவு செய்யப்பட்ட திரைப்படமாகும்.

வெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெற்ற முதல் தமிழ்த்திரைப்படம்

1937-ல் லண்டன் மாநகரில் எடுக்கப்பட்ட நவயுவன் முதன்முதலாக வெளிநாட்டில் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும்.

வெளிநாட்டுத் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம்

கெய்ரோவில் நடைபெற்ற ஆப்பிரிக்க ஆசிய திரைப்பட விழாவில் பங்கேற்ற வீரபாண்டிய கட்டப்பொம்மன் வெளிநாட்டுத் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படமாகும். மேலும் இத்திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை சிவாஜி கணேசனும் சிறந்த இசையமைப்பிற்கான விருதை ஜீ.ராமனாதன் பெற்றனர்.

அதிக பாடல்கள் கொண்ட தமிழ்த் திரைப்படம்

1934 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீ கிருஷ்ண லீலா அதிக பாடல்களைக் கொண்டு வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படம் 62 பாடல்களைக் கொண்டிருந்தது.

தமிழில் வெளிவந்த முதல் 70 எம்.எம் திரைப்படம்

1986 ஆம் ஆண்டு வெளிவந்த மாவீரன் முதன் முதலாக 70 எம்.எம் அளவில் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். ரஜினிகாந்த், அம்பிகா நடிப்பில் வெளிவந்தது இவ்வதிரடித் திரைப்படம்.

தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட முதற் திரைப்படம்

1943 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளிவந்த அரிச்சந்திரா திரைப்படம் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்ட முதல் வேற்றுமொழித் திரைப்படமாகும்.

சர்வதேச விருது பெற்ற முதல் ஈழத்து குறும்படம்

2009 ஆம் ஆண்டு தமிழியம் சுபாஸ் தயாரித்து இயக்கிய வன்னி எலி குறும்படம் வங்காளதேசத்தில் நடைபெற்ற 11 சர்வதேச சுதாசின குறும்பட விழாவில் சிறந்த கதைப் படத்திற்கான விருதை பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here