தமிழையாண்ட புதுவை ஆண்டாள்..!

0
52

‘தமிழையாண்ட புதுவை ஆண்டாள்’

2016 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 11 ஆம் நாள், எட்டயபுரத்தில் நடந்த பாரதி பிறந்த நாள் விழாவிற்குச் சென்றிருந்தேன். காலையில் பாரதியார் அவதரித்த இல்லத்தில் அவர் பாடல்களைப் பாடி முடித்ததும் ஊர்வலமாக மணிமண்டபம் சென்றோம். என்னுடன் தூத்துக்குடி நண்பர் ஒருவரும் சாத்தூர் நண்பர் ஒருவரும் இருந்தார்கள்.

அப்போது எழுபது வயது மதிக்கத்தக்க ஒருவரை மண்டபத்தினுள்ளே கவனித்தேன். கூட்டம் முழுவதும் வெளியே ஆங்காங்கே நின்று கொண்டிருந்தது.

நான் கவனித்த அந்த பெரியவர் தலை வாரக்கூடிய சீப்பை ஒரு சிறிய கர்ச்சீப்பை இரண்டாக மடித்து உள்ளே வைத்திருந்தார். ஏதோ வித்தியாசமாக செய்யப் போகிறார் என்று என் உள்ளுணர்வு சொல்லியது!

நாங்கள் நான்கைந்து பேர் மட்டுமே நின்று கொண்டிருந்தோம். சீப்பை வாயில் வைத்து சீட்டியொலி போல ஒலியெழுப்பினார். (ஸ்ருதி சேர்த்துக் கொண்டார்!) பிறகு அதிலிருந்து பாரதியார் பாடல்கள் பிறந்தன. ரசித்தோம்.

தனக்கு தென்காசி என்றார். ஏற்கனவே எங்கேயோ பார்த்த உணர்வு எனக்குள் எழுந்தது. கேட்டதற்கு மழுப்பி விட்டார்.

நான் விடாமல் விசாரித்ததும் தான் இன்னாரென்ற உண்மையைச் சொன்னார்.

நாங்கள் எட்டயபுரம் வீதிகளில் நடந்தோம். பெருமாள் கோயில், அரண்மனை, முத்துசாமி தீட்சிதர் சமாதி என்று எல்லா இடங்களிலும் சுற்றினோம். எங்கள் அனைவருக்கும் மதிய உணவுக்கான செலவை நாங்கள் மறுத்தும் அவரே வழங்கினார்.

எட்டயபுரம் அரண்மனையை விட்டு வெளியே நடந்து வந்துகொண்டிருந்தோம். அப்போது பேச்சு ஆண்டாள் பக்கம் திரும்பியது. அப்போதுதான் அவர் தனது பையில் இருந்து புத்தகங்களை எடுத்து எங்கள் மூவருக்கும் வழங்கினார். ஆவலுடன் பிரித்தேன் ‌….

அது ஆண்டாள் திருப்பாவை. முகப்பு ஆங்கிலத் தலைப்பில் இருந்ததால் திருப்பாவையை யாரோ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள், அதை அவர் நம்மிடம் தருகிறார் என்று நினைத்துப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். கடைசிப் பக்கத்துக்கு அடுத்த உள்ளட்டையில் மொழிபெயர்த்தவருடைய படத்தைப் பார்த்ததும் இவரேதான் இதன் ஆசிரியர் என்று அறிந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன். அவர் புன்னகைத்ததோடு சரி!

இதோ ( அனைவருக்கும் மனப்பாடம் ஆகியிருக்கும்) முதல் பாசுரம்:

Pasuram 1

Ayppadi gopikas soliciting fellow damsels
For margazhi early morning bath
Preceding pavai penance.

‘Ah, bejewelled damsels! Ayppadi’s affluent

Little girls! Full moonlit margazhi, festive day;

Desirous of early morn bath! Come along;

Narayana, sharp speared, fierce fighter,

Nandagopa’ son, elegant eyed Yasoda’s

Lion cub, dark hued, lotus eyed,

Moon faced, sunny one will grant us boon;

Preform penance amidst praise of whole world;

Ah, our divinely dame!

(Ayppadi- Cowherd’s dwelling place; Narayana- God incarnating as human, son of Nandagopa and Yasodha.)

ஆண்டாள என் வாழ்வில்் எத்தனையோ ஆச்சரியங்களை அள்ளி வழங்கியிருக்கிறாள்! அதில் இதுவும் ஒன்று!

இரவு 8.30 மணியளவில் நெல்லை வந்தடைந்து அவரவர் வழியில் பிரிந்தோம்!

‘கார்மேனிச் செங்கண்’

‘கதிர்மதியம் போல் முகத்தான்’

இந்த இரு தொடர்களையும் ஆங்கிலத்தில் உணர்த்த எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கிறது!

தமிழுக்கும் அமுதென்று பேரய்யா!

ஆங்கிலத்தில் இவ்வளவு சிறப்பாக மொழிபெயர்க்க அவரொன்றும் மொழிப்புலமையுள்ள பேராசிரியரெல்லாம் இல்லை!

வெறும் அறுவை சிகிச்சை செய்கிற மருத்துவர்!

M.S.- Master of Surgery!

படத்தில் அவரைக் காணுங்கள்!

-மா.பாரதிமுத்துநாயகம்,
விக்கிரமசிங்கபுரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here