நினைக்கும் போதே நெஞ்சுக்குள்
புத்துணர்வு பெறச்செய்யும் திருநாள் …
துன்பங்களைத் துடைத்தெறிந்து
இன்பங்கள் இல்லறங்களில் நிரம்பிட
கலைகளுடன் கலந்த எம் திருநாள்…
உயிர்களை தன் கதிர்களால் உயிர்பிக்கும் கதிரோனுக்கொரு நாள்…
உலகிற்கே உண்டிதரும் உழவிற்கென ஒருநாள்…
உற்ற உறவினர்களுடன் கூடி மகிழ ஒருநாளாய்த்
திருநாள் கோலம்தான்… தனக்கெனத் தனித்தன்மை கொண்டு
தரணியாளும் தமிழ்மொழியின்
தவப்புதல்வர்களின் தங்கத்திருநாள்…
பண்பாடு பாரம்பரியங்கள் பள்ளி எம் வவாடிவாசல்…
பெருமையோடு மார்தட்டி பேர்சொல்லும்
ஏர்பூட்டும் தமிழனின்
தைத்திருநாளாம் தமிழர் திருநாள் வாழ்த்துகள்….
– தமிழ் பாரதி