பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகவுள்ளது.
முடிவுகள் மாணவர்களின் மொபைல் எண்ணுக்கே எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்ப அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தனித்தேர்வர்களுக்கு அவர்கள் தேர்வு எழுத விண்ணப்பிக்கும்போது வழங்கிய மொபைல் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும் அதேபோல் கடந்த 27ம் தேதி மறு தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவர்களுக்கும் இன்று முடிவுகள் வெளியாகவுள்ளது.
தமிழகத்தில் 8.32 லட்சம் பேர் மாணவர்கள் பிளஸ்-1
தேர்வை எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பிளஸ்-2 மறுவாய்ப்பு கடைசித்தேர்வை 519 மாணவ, மாணவிகள் எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது
இன்று வெளியாகவுள்ள பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மற்றும் பிளஸ் 2 வகுப்பில் விடுபட்ட மாணவர்களுக்கு கடந்த 27 ம் தேதி நடந்த தேர்வுகளின் முடிவுகளை மாணவர்கள் கீழ்க்கண்ட இணையதளத்தின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
மேலும் விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் இணையதள வாயிலான மதிப்பெண் பட்டியல் வழங்குவதற்கான தேதி மற்றும் வழிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிளஸ் 1 தேர்வில் 96.04 விழுக்காடு மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவியர்களில் 97.49 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றனர்.
பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவர்களில் 94.38 விழுக்காட்டினர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.