தமிழகத்தில் இன்றையகரோனா பாதிப்பு நிலவரம் குறித்தசெய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
இதன்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 5,835 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 5,810, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் உறுதி செய்யப்பட்டோர் 25பேர்.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,20,355 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் தொடர்ந்து 7 வது நாளாக இன்றும் ஆயிரத்துக்கும் குறைவாக 989 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இன்றைய அறிவிப்பில் மேலும் 119 பேர் (அரசு மருத்துவமனை -81, தனியார் மருத்துவமனை -38) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 5,397 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் இன்று மட்டும் 5,146பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 2,61,459பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 53,499 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில்இன்று மட்டும் 67,275 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை மொத்தம் 34,99,300 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இன்றைய நிலவரப்படி அரசு ஆய்வகங்கள் 61, தனியார் ஆய்வகங்கள் 72என மொத்தம் 133கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முழு விவரம்
அரியலூர் 76 பேர்,
செங்கல்பட்டு 453 பேர்,
சென்னை 989 பேர்,
கோயம்புத்தூர் 289 பேர்,
கடலூர் 258 பேர்,
தருமபுரி 21 பேர்,
திண்டுக்கல் 141 பேர்,
ஈரோடு 50 பேர்,
கள்ளக்குறிச்சி 86 பேர்,
காஞ்சிபுரம் 243 பேர்,
கன்னியாகுமரி 185 பேர்,
கரூர் 40 பேர்,
கிருஷ்ணகிரி 8 பேர்,
மதுரை 151 பேர்,
நாகப்பட்டினம் 68 பேர்,
நாமக்கல் 47 பேர்,
நீலகிரி 7 பேர்,
பெரம்பலூர் 31 பேர்,
புதுக்கோட்டை 131 பேர்,
ராமநாதபுரம் 60 பேர்,
ராணிப்பேட்டை 57 பேர்,
சேலம் 173 பேர்,
சிவகங்கை 65 பேர்,
தென்காசி 138 பேர்,
தஞ்சாவூர் 154 பேர்,
தேனி 286 பேர்,
திருப்பத்தூர் 64 பேர்,
திருவள்ளூர் 390 பேர்,
திருவண்ணாமலை 150 பேர்,
திருவாரூர் 27 பேர்,
தூத்துக்குடி 94 பேர்,
திருநெல்வேலி 189 பேர்,
திருப்பூர் 64 பேர்,
திருச்சி 161 பேர்,
வேலூர் 141 பேர்,
விழுப்புரம் 104 பேர்,
விருதுநகர் 219 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.