தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முக்கிய தீர்ப்புகள் …

0
78

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட சில முக்கிய தீர்ப்புகளை தொகுத்து எழுதியுள்ளேன். சரியான நேரத்தில் பயன்படுத்தி ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்திற்கு துணை நில்லுங்கள்.

மூத்த குடிமக்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர் தாக்கல் செய்யும் மனுக்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என மாநில தகவல் ஆணையம், வழக்கு எண் : CIC/Legal/2007/2006/13.2.2008/L.C.singhi additional Registrar என்ற வழக்கில் உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்கள் கோரும் விவரங்களை கொடுக்க தவறும் அரசு ஊழியர் நாள் ஒன்றுக்கு ரூபாய் 250 வரையில் அபராதம் விதித்து தண்டிக்கப்படுவார். எவ்வளவு நாள் காலதாமதம் செய்யப்பட்டதோ அந்த ஒவ்வொரு நாளுக்கும் ரூபாய் 250 விதித்து தண்டிக்கப்படுவார். அதிகபட்சமாக ரூபாய் 25,000 அபராதம் விதிக்கப்படும். இதுதவிர மனுதாரருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 19(8)(b) ன்படி நஷ்ட ஈடு வழங்கவும் உத்திரவிடப்படும் என்று 519/IC(A)/2007 F. No. CIC/AT/A/2006/00781/6.3.2007 மற்றும் CIC/WB/A/2006/00345/3.11.2006 ஆகிய வழக்குகளில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 12 மற்றும் 12(4) ன்படி PIO, CPIO ஆகியோர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கடமை தவறினால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 176,177, 186,188,228 ன் கீழ் தண்டிக்கப்படுவார்கள் என CIC/WB/A/2006/00830&889. Date – 7.1.2008 ( Shri. S. S Bhamra Vs CPIO President Secretariat, CPIO, Under Secretary, Department of Personnel & Training) என்ற வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உளவுப்பிரிவு மற்றும் பாதுகாப்புப் பிரிவுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் பொருந்தாது என அரசு G. O. Ms. No – 1042 Public (Estt. I&Leg) date – 14.10. 2005 மூலமாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

தகவல் தராமல் அலைக்கழித்ததற்காக பொதுத் தகவல் அலுவலருக்கு அபராதம் விதித்து மத்திய தகவல் ஆணையம் CIC/WB/C/2006/00145 Date – 10.8.2006 என்ற வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தகவலை சரியாக வழங்காமல் மனுதாரருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக இழப்பீடு வழங்க வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் 30/ICPB 2006 Date – 13.6.2006 என்ற வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேல்முறையீடு அதிகாரியை தண்டிக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வழிவகைகள் இல்லை. எனவே அவர்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்து மத்திய தகவல் ஆணையம் CIC/WB/A/2006/00040 என்ற வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மகளின் கொலை வழக்கு தொடர்பான புலன்விசாரனையின் நிலை, Status குறித்த தகவல்களை காவல்துறையினர் வழங்க வேண்டும் என மத்திய தகவல் ஆணையம் CIC/AT/A/2006/00355/ Date – 26.12.2006 என்ற வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடன் பற்றிய விவரங்களை தராத வங்கியின் கிளை மேலாளர் மற்றும் மத்திய பொதுத் தகவல் அலுவலர் ஆகியோர்களை கண்டித்து, உரிய தகவலை வழங்க வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் 435/IC(A)/2006 (CIC/MA/A/2006/00423 Date – 28.12.2006 என்ற வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here