ஜனநாயக கடமையை நிறைவேற்றுவோம்.. !

0
28

இனிய உறவுகளே இன்று ஒருநாள்
கடவுளை விட பெரிதாய்

இனிய உங்கள் ஒருவிரலை நம்புகிறோம்

தமிழ் தாயை நல்லோர் தலைவனை
தன்மானமுள்ளதலைவனைதேர்வுசெய்யவேண்டும்

உங்கள் இதயம் நியாயத்தின் தீர்மானமாக இருக்கட்டும்

நீங்கள் சொல்லும் தீர்ப்பிலே
தமிழ் தாய் அழுவதும் மகிழ்வதும்

சொன்ன வாக்குறுதிகள் காணல் நீர்போன்றது
செய்தவாக்குறதிகள் கருமலைபோன்றது

அவர்கள் செய்தநற்செயலே
அழகிய குன்றில் ‌சிகரம்போன்றது

செய்தது சிகரமா? சிரமமா?

கோர்ட்டில் பொய் சாட்சி சொல்ல தண்டனை பெறுவது
குற்றவாளி அல்ல
குற்றமாய்வாக்கு சாட்சி சொன்ன நம்மையேசேரும்

ஐந்து வருட சிறை தண்டனை பெறுவது நாம்தான்

வாக்கு என்றசாட்சிசொன்ன நமக்கு
வாய்க்குள்ஊத்தி ஒழுக
வரண் கொடுத்தான் இடைத்தரகன்

நல்லவனாய் வல்லவனாய்
நாட்டை காப்பவனாய்
உங்கள் நீதிதீர்ப்புவிரல் காட்டட்டும்!!
காசுவாங்கினாலும் அதுகண்ணைமறைக்ககூடாது
நமக்கு தெரியாமல் நம் வரிப்பணம் பெட்ரோல்டீசல் சிலிண்டர் வழியே
போய் சேர்ந்ததுதானே

வாங்கிய காசைமறந்நிடுங்கள்
நம் அரசுக்கு கணக்கில் வராத கருப்பு பணம் தானே அது!

தீர்ப்பு திடமாய் யோசித்து
திருடனை அரியணைஏற்றாதிருக்கட்டும்!
உங்கள் பாதம்தொடுகிறேன்

இன்று இதழ்சிந்நிகாது புன்னகைத்தாள்
இனி என்றென்றும் அழநேரும்!

– கவிதை மாணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here