செவிலியர்கள் தின வாழ்த்து கவிதை..!

0
19

மருத்துவதொழில் மகத்தானது !
அதில் செவியர் சேவை சிறப்பானது!
ஆண்களே!
மருத்துவத்துறையில் சேவையில் ஈடுபட்டனர் !!
அக்காலம் (1664ல்)
போர்காலசேவையில்
காயம் பட்ட வீரர்களைகாக்க!
செவிலியர்கள் சேவை அறிமுகமாகி!!
நாட்கள்செல்ல மகளிர் மகப்பேறு சேவையில்!!
பெண்செவிலிர்கள்சேவை சிறப்பாகி!!
கைநீட்டி காசுவாங்கும் உயர்ந்தடாக்டர் !!
கண்ணால் பார்த்து கூறுவதோடு சரி!!
கைதொட்டு‌!
மெய்தொட்டு!
நோயாளி யின் இதயம் தொட்டு!!
குறைந்தவரவுக்காய்!!
ஆராதரணங்களை
சீல் துடைத்து!!
அன்பில் சேவைசெய்யும் பாங்கு!!
வானத்து தேவதைகள் தரைஇறங்கிய தருணம்!!
வாடிக்கையாய்வரும்நோயாளிகளை!!
வாஞ்சையுடன் வரவேற்று!!
இரவுபகலாய் தன் குடும்பகஷ்டம்கூட மறந்து!
மூன்றுவேளையும்நோயாளிகளுக்கு!
கொடுத்தனர் மருந்து!!
உயிர்பிழைக்க உதவும் சேவையில்!!
சாதி மதம் மொழி மறந்த !!
கடவுள் சேவைசெய்யும்
செவியர்கள்!! இறைவனின்மறுவடிவே!!
கொரோணாகால சேவையில்!!
கொடுரமரணங்கள் கண்டும்!!
தன்உயிரைபணயம்வைக்கும், சேவை!!
நாட்டை பாதுகாக்கும்
இச்செவிலியர்களை வாழ்த்தி! வணங்குவோம்!!

உலக செவிலியர்கள் தின வாழ்த்துக்கள் !!

-கவிதை மாணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here