சென்னை கிருஷ்ணசாமி கல்லூரியில் India Turns Pink சார்பில் நடத்தப்பட்ட மகளிர் தின சிறப்பு விழாவில், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பற்றிய கலந்துரையாடல் .

0
25

சென்னை அண்ணாநகர், கிருஷ்ணசாமி கல்லூரியில் India Turns Pink சார்பில் நடத்தப்பட்ட மகளிர் தின சிறப்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக INDIA TURNS PINK தொண்டு நிறுவனத்தின் PINK AMBASSADOR ம் ஊடகவியலாருமான திருமதி ஹேமலதா ராக்கேஷ் அவர்கள் கலந்துகொண்டு மாணவிகள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.

திருமதி ஹேமலதா ராக்கேஷ் அவர்கள் India Turns Pink தொண்டு நிறுவனத்தின் Pink Ambassador ஆக இருப்பதால் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வுகளில் பங்கெடுத்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு தொடர்பான செய்திகளை கொண்டு போய் சேர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போது….

இன்றும் பெண்கள் தனக்கு மார்பகங்களில் வலியோ, கட்டியோ மாறுதேலோ ஏதாவது இருப்பின் அதை தங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் சொல்வதில் தயங்கும் பெண்களே அதிகம். அதனால் மார்பக புற்றுநோய் பல நிலைகளை கடந்து பாதிக்கப்பட்ட பெண்களை காப்பாற்ற முடியாத சூழலுக்கு சென்று உயிரிழப்பும் ஏற்படுகிறது.

மார்பக புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால் அதை முழுமையாக குணப்படுத்த முடியும். ஆண்களுக்கும் இது தொடர்பான விழிப்புணர்வு இன்றைக்கு அவசியம்.

மாறி வரும் வாழ்க்கை சூழலில் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வின் அவசியம், பெண்கள் மனத்தடைகளை விலக்கி உரையாடுவதின் தேவை என பல விஷயங்கள் குறித்து மாணவிகளிடம் உரையாடல் நடத்தப்பட்டது.

 தகவல் – கிருஷ்ணகிரி மாருதி மனோகரன் அவர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here