சுஷாந்த் மற்றும் அவரது படத்துக்கு அன்பு மழை – ஏ.ஆர்.ரஹ்மான் டுவீட்

0
51

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசி படமான தில் பேச்சாரா ட்ரைலர் பிரபல ஹாலிவுட் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.

பாலிவுட்டின் பெரும் பிரபல நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரது கடைசி படமான தில் பேச்சாரா திரையரங்கில் வெளியிட வேண்டும் என குரல்கள் எழுந்தன, ஆனால் அதை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம் வாங்கியுள்ளது.

ப்ரோ வாடிக்கையாளர்கள் மட்டுமே பார்க்கக்கூடிய வகையில் ஹாட்ஸ்டார் அதை வெளியிட்டால் அனைவராலும் அந்த படத்தை பார்க்க முடியாது என பல ரசிகர்கள் வருத்தம் தெரிவித்தனர். இந்நிலையில் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் இந்த படத்தை யார் வேண்டுமானாலும் இலவசமாகவே ஹாட்ஸ்டார் மூலமாக பார்க்கலாம் என அந்நிறுவனம் அறிவித்தது.

அதை தொடர்ந்து நேற்று முன் தினம் இந்த படத்தின் ட்ரைலர் யூட்யூபில் வெளியானது. வெளியான இரண்டே நாட்களில் மொத்தமாக 4 கோடியே 22 லட்சத்திற்கும் அதிகமானோரால் இந்த ட்ரைலர் பார்க்கப்பட்டுள்ளது. இதுவரை 76 லட்சம் மக்களால் இந்த ட்ரைலர் லைக் செய்யப்பட்டுள்ளது. ட்ரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்திற்குள்ளாக 45 லட்சம் மக்களால் இந்த ட்ரெய்லர் லைக் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் ட்ரைலர் 24 மணி நேரத்திற்குள்ளாக 30 லட்சம் லைக்குகளை பெற்றது சாதனையாக பார்க்கப்பட்ட நிலையில் அதை தில் பேச்சாரா முறியடித்துள்ளது. இந்த படத்திற்கு இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் 24 ஜூலை அன்று படம் வெளியாக உள்ளது
மேலும் இந்தப் படத்தின் டிரெயிலர் தற்போதுவரை 4 கோடியே 40 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து 78 லட்சம் லைக்குகளைப் பெற்று பெரும் சாதனைஇ புரிந்துள்ளது.
இப்படத்திற்கு இசை அமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார் அதில், சுஷாந்த் மற்றும் தில் பெச்சாரா படத்துக்கு அன்பு மழை பொழிகிறது என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here