நான்
காவி உடையணிந்த
இயேசு,,,,
குல்லா அணிந்த
புத்தன்
சிலுவை சுமக்கும்
சிவன்
முத்திராட்சையணிந்த
முகம்மது
பகவத் படிக்கும்
கர்த்தர்
பைபிள் படிக்கும்
இஸ்மாயில்
குரான் படிக்கும்
முருகன்
அனைத்து வல்லமைகளின்
ஒருங்கிணைந்த கலவை,,,
உழைப்பதால் உண்கிறேன்
விதைப்பதால் அறுவடை செய்கிறேன்
நீவிர் என்னிடம் வந்து
நீ எந்த சாதி?
நீ எந்த மதம்?
என்று கேட்பீர்களானால்
ஒன்று சொல்வேன்!
உங்கள் மார்புக்குள் அடைகாக்கும்
மல புழுக்கைகளை கழுவி விட்டு
என்னிடம் வாருங்கள்,,,
சுவாசம் ஜீவிக்கும் நறுமணத்தை
காட்டுகிறேன்,,,,
❤
-சுயம்பு