சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆவணி மாத திருவிழா ரத்து

0
58

தற்போது உலகையே ஆட்டிப்படைக்கும் கொரானா வைரஸால் சுசீந்திரம் கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் ஆவணி மாத திருவிழா வெகு விமரிசையாக 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா வருகிற 25-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுவதாக இருந்தது.

தற்போது உலகையே ஆட்டிப்படைக்கும் கொரானா வைரஸால் தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் நடைபெறும் நித்தியகாரிய பூஜைகளை தவிர்த்து திருவிழாக்கள் நடத்த தடைவிதித்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு சுசீந்திரம் கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here