உயிரைகுடிக்கும் சீட்டு கட்டு விளையாட்டின் வரலாறு…!

0
547

ஒரு பொழுதுபோக்கு விளையாட்டான ரம்மி என்னும் சீட்டு கட்டு இப்பொழுது சிலரது உயிர்களை பறிக்கும் எமனாக மாறிவருகிறது .இந்த சீட்டுக்கட்டு பற்றிய சில தகவல்கள் உங்களுக்காக ….

இன்றைய காலகட்டத்தில் சீட்டு விளையாட்டு அப்படிங்கறது சாதரணமான ஒரு விசயமா இருக்கு.

உலகத்தில் பல பகுதிகளில் இயங்கி கொண்டிருக்கிற கேசினோஸ் எல்லாம் இந்த சீட்டாட்த்தை அடிப்படையா வச்சி தான் இயங்கி கொண்டிருக்கிறது.

இந்த சீட்டு விளையாட்டு முதன் முதலாக ஒன்பதாம் நூற்றாண்டில் சீனாவில் தான் கண்டு பிடிக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

அதற்கு பின்னர் பதிமூன்றாம் நூற்றாண்டில் தான் இந்த உலகத்தோட பல பகுதிகளில் பரவியுள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு முறையிலான சீட்டுகட்டு முறை இருந்திருக்கிறது.

பிரான்ஸ் நாட்டில் உருவான 52 சீட்டுகட்டு முறை தான் பெரும்பாலான எல்லா நாட்டிலும் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது.

இந்த 52 சீட்டு முறை எப்படி உருவாகியது என்று இதுவரை தெளிவான ஒரு விடை கிடையாது.
ஒரு சிலரோட கருத்துப்படி ஒரு வருடத்தோட 52 வாரங்களை குறிப்பதே இந்த 52 சீட்டு முறைனு சொல்றாங்க.

நான்கு வடிவங்களும் நான்கு காலங்களை குறிப்பிடுவதாகவும் சிவப்பு நிறம் பகல் நேரத்தையும் கருப்பு நிறம் இரவு நேரத்தையும் குறிப்பிடுவதாகவும் சொல்கிறார்கள்.

சிவப்பு நிற இதய வடிவம் இளவேனிர் காலத்தையும்..
சிவப்பு நிற டைமன்ட் வடிவம் மழைக் காலத்தையும்..
கிளாவர் வடிவம் வெயில் காலத்தையும்..
ஸ்பேடு பனிக் காலத்தையும் குறிப்பிடுவதாக கூறுகிறார்கள்.

ஒவ்வொரு வடிவமும் 13 சீட்டுகளை கொண்டிருப்பதை நிலமுடன் சுற்றுக்காலத்தை குறிப்பதாக கூறுகிறார்கள்.

இன்னும் ஒரு கருத்தும் இருக்கு.

பிரென்ச் நாட்டில் காணப்படுகிற மக்களின் வாழ்க்கை தரத்தை தான் இந்த நான்கு வடிவங்களும் கூறுவதாக கூறுகிறார்கள்.

ஸ்பேடு வடிவம் அதிகார வர்கத்தையும்..
இதய வடிவம் மத குருக்களையும் டைமன்ட் வடிவம் வியாபாரிகளையும் ..
கிளாவர் வடிவம் விவசாயிகளை குறிப்பதாகவும் கூறுகிறார்கள்.

இந்த சீட்டில் காணப்படுகிற
ஜாக் குயின் கிங் ஆஸ் இந்த நான்கிற்குமே சில சுவாரசியமான தகவல்கள் இருக்கின்றது..
இந்த சீட்டு கட்டில் நான்கு ராஜா உருவம் பொறிக்கப்பட்ட கொண்ட சீட்டு இருக்கிறது.

ஸ்பேடு கருமை ராஜா பைபிளில் கூறப்படுகின்ற கிங் டேவிட்டை குறிப்பதாகவும்.
டைமன்டில் இருக்கும் ராஜா ஜுலியஸ் சீசரை குறிப்பதாகவும்.. கிளாவரில் இருக்கும் ராஜா சார்லஸ் தி கிரேட் அப்படியென்று கூறப்படுகின்ற சார்லி மாங்கே அப்படியென்ற அரசரை குறிப்பதாகவும்
ஹார்டின் ராஜா அலெக்சாண்டரை குறிப்பதாகவும் இருக்கிறது.

இந்த நான்கு ராஜாவில் இதய வடிவம் சீட்டில் உள்ள ராஜாவிற்கு மட்டும் தான் மீசை கிடையாது.
அந்த ராஜா மட்டும் தான் கத்தியால் தன்னோட தலையை குத்திக் கொள்கிற மாதிரியான வடிவமா இருக்கிறது.
இதனால் இந்த கிங் ஆப் ஹார்ட் சீட்டிற்கு சூசைட் கார்ட் அப்படியென்ற பெயரும் இருக்கிறது.

அதே மாதிரி ஒரு சீட்டுக் கட்டில் நான்கு ராணிகள் இருப்பார்கள்.
இந்த ராணிகளும் வரலாற்றில் காணப்படுகிற ராணிகளை குறிப்பதாக தான் இருக்கின்றது.

ஸ்பேடு ராணி கிரேக்கர்களின் நம்பிக்கைப் படி அறிவுக் கடவுளான அட்டேனா ராணியையும்..
டைமன்ட் ராணி பைபிளில் சொல்லப் பட்டிருக்கின்ற ராக்கேல் என்ற ராணியையும்..
கிளாவர் ராணியும் பைபிளில் கூறப் படுகின்ற ஜூடிக் ராணியையும் …
ஹார்ட் ராணி ரெஜினாவை குறிப்பிடுவதாகவும் உள்ளது.

இந்த சீட்டு விளையாட்டு அப்படிங்கறது பழங்காலத்திலேயே உருவான விளையாட்டு என்பதை பார்த்தோம்.

இரண்டாம் உலகப் போரின் போது இந்த சீட்டுக் கட்டு மிகவும் ஒரு முக்கியமான இடத்தில் அங்கம் வகித்ததாக ஒரு கருத்து உண்டு.

ஜெர்மனியால் பல அமெரிக்க வீரர்கள் சிறை பிடிக்கப்பட்டார்கள் .
அந்த சமயத்தில் அமெரிக்காவில் இருந்து சிறைக் கைதிகளாக இருந்த வீரர்களுக்கு சீட்டுக் கட்டுக்கள் அனுப்பட் பட்டிருக்கிறது.

அந்த சீட்டுக்களை கிழித்தால் அதற்கு பின்னாடி வரைபடம் இருந்திருக்கிறது.
அதை அடிப்படையாக வைத்து அங்கிருந்த வீரர்களை தப்பிக்க அந்த வரைபடம் உதவியாக இருந்ததாக ஒரு கருத்து உள்ளது.

சில காலம் முன்னாடி வரைக்கும் சீட்டு விளையாட்டு அப்படியென்பது தண்டனைக்குறிய விளையாட்டாக இருந்தது.
18ம் நூற்றாண்டில் பிரிட்டிஸ் நாட்டில் இந்த சீட்டு விளையாடுபவர்களுக்கு தனியாக வரி செலுத்த சட்டமும் இருந்துள்ளது.

சீட்டு விளையாடுபவர்கள் வரி செலுத்தி விட்டார்கள் அப்படி என்பதற்கு சான்றாக அந்த சீட்டில் ஆஸ் ஸ்பேடில் அரசாங்கத்தோட முத்திரையை பதித்துள்ளார்கள்.
அந்த முத்திரையை வரி கட்டாதவர்கள் போலியாக தயாரித்து சீட்டு விளையாடினால் மரண தண்டனை விதிக்கும் அளவுக்கு பெரிய குற்றமாக கருதப்பட்டது.

1960 வரைக்கும் இந்த வழக்கம் பிரிட்டிஷ் நாட்டில் பழக்கத்தில் இருந்துள்ளது.
இந்த வரிசையை விட்டு தனியாக இரண்டு சீட்டுகள் காணப்படும்.
அதுதான் ஜோக்கர் சீட்டு.

பழங்காலத்தில் உருவாக்கப்பட்ட சீட்டுக் கட்டுகள் எதிலுமே இந்த ஜோக்கர் என்பது கிடையாது.

19ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தான் இந்த மாதிரியான ஜோக்கர் சீட்டுகளை உருவாக்கின்ற முறை பின்பட்டிருக்கிறது.

நம்ம ஊரில் ஜோசியம் பாக்குற மாதிரி அமெரிக்காவில் டராட் அப்படியென்று
சொல்லப் படுகின்ற ஒரு முறைக் காணப்படுகிறது.
அந்த முறையில் முட்டாள் அப்படியென்பதை குறிப்பிடவதற்காக தான் இந்த ஜோக்கர் சீட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

நாளடைவில் அந்த ஜோக்கர் சீட்டு உலகத்திலுள்ள எல்லா சீட்டுக் கட்டு முறையிலும் பரவியுள்ளது.

இப்போது இந்தியாவில் விளையாடுற விளையாட்டில் ஜோக்கர் என்பது மிகவும் முக்கியமான ஒரு இடத்தைப் பிடிச்சிருக்கு.

இது மாதிரி சீட்டுக்கட்டிளுள்ள ஒவ்வொரு சீட்டிற்கும் பல உண்மைகள் சொல்லப் பட்டாலும் ஒரு காலத்தில் மிகப்பெரிய குற்றமாக கருதப்பட்ட சீட்டு விளையாட்டு இன்றைக்கு
சர்வ சாதரணமாக எல்லாருமே விளையாடுகிற ஒரு விளையாட்டாக மாறியுள்ளது என்பது மிகவும் ஆச்சரியமான உண்மைதான்….!!

இந்த சீட்டு விளையாட்டை ஒரு பொழுதுபோக்காக நினைத்து விளையாடினாள் எந்த பாதிப்பும் யாருக்கும் இல்லை. அதை சூதாட்டமாக பணம் வைத்து விளையாடுவது சிலரது உயிரை பறிக்கும் எமனாக மாறிவிடுகிறது இந்த ரம்மி என்னும் சீட்டு விளையாட்டு …!

சூதாட்டத்தை தவிர்ப்போம் ..! உயிர்களை பாதுகாப்போம் ..!

-அக்கறையுடன்

உங்கள் சிநேகிதன் ஜெ.மகேந்திரன்,

மகிழ்ச்சி வானொலி குழுமம் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here