சிம்ரனின் 23 ஆண்டு நினைவலைகள்

0
62

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு சில ஹீரோயின்கள் அதிகம் பேசப்பட்டவர்களாக இருப்பார்கள். அப்படி 90களில் தனது நடிப்பாலும், நடனத் திறமையாலும் பேசப்பட்ட நடிகைகளில் முதன்மையானவர் சிம்ரன்.23 ஆண்டுகளுக்கு முன்பு ஜுலை 4ம் தேதி ஒரே நாளில் அவர் நாயகியாக அறிமுகமான ‘ஒன்ஸ்மோர், விஐபி’ ஆகிய இரண்டு படங்கள் வெளிவந்தன. அறிமுக நடிகை ஒருவரின் இரண்டு படங்கள் ஒரே நாளில் வருவது ஆச்சரியமான ஒன்று தான்.அதிலும் ‘ஒன்ஸ்மோர்’ படத்தில் சிவாஜி கணேசன், சரோஜாதேவி என தமிழ்த் திரையுலகின் சீனியர் நடிகர்கள், மற்றும் இன்றைய முன்னணி ஹீரோ விஜய்யுடன் ஜோடி. அடுத்து ‘விஐபி’ படத்தில் பிரபுதேவா, அப்பாஸ், ரம்பா என அப்போது பரபரப்பாகப் பேசப்பட்ட நடிகர்களுடன் ஒரு படம். இந்த இரண்டு படங்களுமே சுமாராகத்தான் ஓடின. ஆனால், அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த பெருமையைப் பெற்றவர் சிம்ரன்.தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 23 ஆண்டுகள் ஆனது குறித்து சிம்ரன், “23 ஆண்டுகளுக்குப் பிறகும் சிவாஜி கணேசனுடன் பணிபுரிந்த அனுபவம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. ஒரு கனவு நனவானது. அவரிடமிருந்து பெற்ற ஆசீர்வாதம், கற்ற அனுபவம் தான் இன்று நான் யார் என்பதைத் தந்துள்ளது என நினைக்கிறேன். நண்பன் விஜய், பிரபுதேவாஜி, ரம்பா, அப்பாஸ் ஆகியோருடன் எனது தமிழ் சினிமாவை ஆரம்பித்தது அதிர்ஷ்டம். என் கடைசி மூச்சு வரை தமிழுக்கும், தமிழருக்கும் நன்றிக்கடன் பட்டவளாயிருப்பேன்,” என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here