சிட்டுக்குருவிகள் தினம்

0
34

சின்னஞ் சிறு சிட்டுக்குருவியே! யாரிடம் கற்றுக் கொண்டாய்!! நெசவென
கட்டிடகலையை!!

சிறுபுல்கொண்டு சித்திரமாய்கூடுகட்டி!!
பெருமழைக்கும் பெரும்வெயிலுக்கும்!!
அஞ்சாது,,!
பெருமையுடனே! எதிர்கால கனவு காணாது!!

அன்றைய சந்தோஷம்! அழகானதென!
அரும்பெரும் உண்மையை!! அன்றாடம்,,
அறிவைகற்றுத் தந்தாய்!, மனிதனுக்கும்!!,
அறவேபுரியா! மனிதன்!! பேராசையில் அல்லல் படுகிறான்!

திணை ,கம்பு சோளம்விதைக்க!
திண்ணவரும்படை கூட்டமே!! உங்களை
காணபேரழகு!! ஒன்றுகூட்டி
காண வரும்சிட்டுக் குருவிகளின் ஒற்றுமையே!! சிறப்பு!

சிட்டுக்குருவியே! தடமில்லாது வானில் பயணிக்கிறாயே!!
சீட்டுவாங்காது அயல் நாட்டுக்கும் சென்று வருகிறாயே!
சிட்டுக்குருவிக்கு கூட நாடுவிட்ட நட்புண்டா!

-கவிதை மாணிக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here