சாம்பவன்! சாண்டியோமானே!

0
116

கைமாறு கருதாத கார்மேகம் வானில்!!
கைமாறு கருதாத கருப்புவைரமேகம்!
மேற்கு ஆப்பிரிக்க மண்ணில்!!!

இளமையில் வறுமை தீ மூட்ட!
இக்கொடுமையில் பள்ளிக்கல்வியை இழந்துவிட்ட!

பாழும் உலகில் உலாவபாத அணிகள் கூட இல்லாது!!

உண்ண உணவு உடுக்க உடை இன்றி!!
உறங்க வீடு இன்றி!! உறைந்து போனமனது!!

தன்தேக வலிமைகொண்டு!!
தன் நாட்டு, கால் பந்தாட்த்தில் உயர்வு கொண்டு!!

கால்பந்தாட்டவானில் துருவநட்சத்திரமாய் மின்ன!!
கனவுகள்மெய்பட!,

வாரச்சம்பளம் நான் காயிரம் வாங்கும்!!
சாமானிய மனிதர்கூட!
வாரவட்டி எடுத்து ஸ்மார்ட் போன் வாங்குவது இன்றைய நிலை!!

வாரம் பதினான்கு கோடி சம்பாரிக்கும் கால்பந்து
சாம்பவன்! சாண்டியோமானே!!

உடைந்தபோனோடு உலாவர!
உண்மை ரசிகர் உங்கள் போனை மாற்றினால் என்ன?
எனகேட்க

போனில்(டிஸ்பிளை) மாற்றிக் கொள்வேன்
போனகாலங்கள்! என்னை வறுமையில் புரட்டியதைநான் மறவேன்!!

ஆடம்பரவாழ்வு வேண்டாம்!
ஆசைப்பட்டால் அகிலத்தில் அதிக விலையேற்றகார் ஜெட் விமானம், வைரகடிகாரம்,
வாங்கதகுதி இருக்கு எனக்கு!!
ஆனால் வாங்கமனமில்லை!

நான் பட்டவறுமை என்நாட்டில் இளைஞர்கள் படகூடாது!!
நான் சம்பாரிக்கின்ற பல கோடிரூபாய்கள்
தானம்செய்ய காணாது!!

பல பேருக்கு வீடு! உடை ,கல்வி, மருத்துவமனை! என
பலருக்குகிடைக் காததை! என் நாட்டு மக்களுக்கு
நான் சமூக சேவை செய்கிறேன்!!

கொடையில் கர்ணனை மிஞ்சும்!
கொள்கையில்
டாட்டா பிர்லா !முகேஷ் அம்பானி! அத்தானி, பில்கேட்சைமிஞ்சும்! கருணை சமூக சேவையில் இவர்களை ஜீரோவாக்கி!!
ஹீரோவான சாண்டியமானே!!
பாராட்டதக்வர்தானே!
பார்முழுக்க பவனி வரும் மனத்தேரே!!

உம் சேவையில் சிறக்க!! உடல் பலமும்
உள்ள பலமும் கொண்டு!
உலகில் பலயுகம்
நிலைக்க!!

இளமையோடு! வாலிப முறுக்கோடு!
இருபத்தி எட்டு அகவையை! நிரந்தரமாக்க!
இறைவனிடம் இன்றே! பிரார்த்திப்போம்!

சமூகசேவைக்கு பாராட்டும்!!
நெஞ்சார்ந்த தொழுகையும் கை கூப்பி !!

 -கவிதை மாணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here