சாதி நிழல்கள்..!

0
19
நல்ல சாதி நிழலில் ஒதுங்கியபடி
தும்பை பூ வேட்டி சட்டை சகிதம்
வளைந்து குனிந்து குறுகி
வாக்குகள் கேட்கிறார் யாசிப்பவர்
புளகாங்கிதத்தில் அவரின்
சாதி நிழல்கள் வாக்களிப்பதாக வாக்களிக்கின்றன
வாழ்க கோஷத்தோடு
மகிழ்ச்சியாக விடைபெறுகிறது
அவர் வாகனம்
அது விட்டுச்சென்ற சக்கரத்தின் தடங்கள் மட்டும்
நீங்காத வடுவாக தார்சாலையில்
பதிந்து கிடக்க
அவ்விடம் தாமதமாக வந்து சேர்ந்த
துணை நிழல்கள்
அவசர அவசரமாக பய பக்தியோடு
கன்னத்தில் இரண்டு போட்டுக்கொள்கின்றன
  – தங்கேஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here