சர்க்கரை நோய் (நீரிழிவு) இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

0
83

ஹெல்தியான கொழுப்பு

எல்லா கொழுப்பும் கெடுதல் அல்ல. நிறைவுற்ற கொழுப்பை எடுத்துக்கொள்வதை தவிர்த்து நிறைவுறா கொழுப்புகளை எடுத்துக்கொள்வது நல்லது.

சாப்பிட வேண்டிய கொழுப்பு

மீன், மீன் எண்ணெய், ஆளிவிதைகள், சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகள், எள் விதைகள், வால்நட், பட்டர் ஃபுரூட் போன்றவை

கார்போஹைட்ரேட்


சர்க்கரை நோயாளிகள் நார்ச்சத்து அடங்கிய கார்போஹைட்ரேட் உணவை எடுத்துக்கொள்ளலாம். முழு தானியங்களில் நார்ச்சத்து இருக்க சாப்பாட்டிற்கு பிறகான குளுக்கோஸ் அளவுக்கு உதவி, இன்சுலின் அளவை பராமரிக்கிறது,சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவை தவிர்ப்பது நலம். ஏனென்றால், இதில் நார்ச்சத்து இருப்பதில்லை.

சாப்பிட வேண்டியது

ஓட்ஸ், சீமைத்தினை, கம்பு, பருப்பு, பிரவுன் ரைஸ், முழு கோதுமை போன்றவை.

ஹெல்தியான புரதம்

உயர் தர புரதச்சத்து எடுத்துக்கொள்வது சாப்பாட்டிற்கு பிறகான குளுக்கோஸ் அளவில் மாற்றத்தை உண்டாக்காது. ஆனால் கார்போஹைட்ரேட்டுடன் சேர்ந்த புரதம், இன்சுலின் செறிவை அதிகரித்து இரத்த குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைக்கிறது.

சாப்பிட வேண்டியது

பருப்பு வகை, முளைக்கட்டிய பயிர், சோயா, பூசணி விதைகள், சிக்கன், மீன் (மத்தி, கானாங்கெளுத்தி, கெண்டை போன்றவை)

காய்கறிகள்

காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்சிஜனேற்ற பண்பு மற்றும் நார்ச்சத்து உள்ளது. குறைந்தது தினமும் இரண்டு வேளையாவது காய்கறிகள் உண்ணுவது உடல் எடை குறைய உதவும், நோய் எதிர்ப்பு சக்தியை தரும், இரத்த குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைக்கும்.

சாப்பிட வேண்டியது

 பசலைக்கீரை, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, காளிஃபிளவர், பட்டாணி, குடைமிளகாய், வெங்காயம், பீன்ஸ், கத்தரிக்காய், தக்காளி, ப்ரோக்கோலி போன்றவை.

பால் உற்பத்தி உணவு

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள பாலால் ஆன பொருட்களான தயிர், பாலாடைக்கட்டி ஆகியவை உதவி இன்சுலின் சுரப்பை கட்டுப்படுத்துகிறது .

சாப்பிட வேண்டியது

 குறைந்த கொழுப்புள்ள பால், முட்டையின் வெள்ளைக்கரு, கொழுப்பு இல்லாத தயிர் போன்றவை.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியவை:

மாம்பழம்

ஒவ்வொரு 100 கிராம் மாம்பழத்திலும் 14 கிராம் சர்க்கரை இருப்பது உங்களுக்கு தெரியுமா. இது இரத்த சர்க்கரை அளவை இன்னும் மோசமாக்கும். அதனால் நீரிழிவு நோய் இருப்பவர்கள் மாம்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

சப்போட்டா

ஒவ்வொரு 100 கிராம் சப்போட்டா பழத்திலும் சுமார் 7 கிராம் சர்க்கரை உள்ளது. அதனால், கிளைசெமிக் குறியீடு அதிகரித்து காணப்படுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் சப்போட்டா பழத்தை தொடாமல் இருப்பது நல்லது.

சீத்தாப்பழம்

சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து உள்ளது. இருப்பினும், நீரிழிவு நோயாளிகளுக்கு இதனை கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனாலும் ஒரு சில ஆய்வு முடிவுகள்படி நீரிழிவு நோயாளிகள், சீத்தாப்பழத்தை அளவோடு எடுத்துக்கொள்ளலாம் என கூறுகிறது.

பப்பாளி

பப்பாளியில் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் அதிகம் உள்ளது. அதனால் பப்பாளியை நீரிழிவு நோய் உள்ளவர்கள் சேர்த்தால், இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். எனவே, பப்பாளியை சாப்பிடாமல் தவிர்த்தல் நல்லது.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் மாவுச்சத்து அதிகம் உள்ளது. இதனால் சர்க்கரையின் அளவு அதிகரிக்க செய்யும். எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் உருளைக்கிழங்கு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here