சமையலறையில் இருக்க வேண்டிய 5 வகையான எண்ணெய்கள்…

0
59

எந்த உணவாக இருந்தாலும் அதற்கு முதலில் எண்ணெய் அவசியம். இப்படி நம் உணவுக்கு அடிப்படையாக இருக்கக் கூடிய எண்ணெய் ஆரோக்கியமானதாக இருப்பதும் அவசியம். அப்படி இந்த எண்ணெய் வகைகளை வீட்டில் வைத்துக்கொண்டு அவ்வபோது தேவைப்படும் உணவுகளுக்கு பயன்படுத்துங்கள்.

ரைஸ் பிராண்ட் எண்ணெய்

இந்த எண்ணெயில் இருக்கும் லிபோயிக் ஆசிட் இரத்ததில் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவும். கொழுப்பை சமநிலையில் பராமரிக்க உதவும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் சமையலில் சேர்த்தாலே தனி ருசிதான். ருசி மட்டுமல்லாது வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. தொண்டை, வயிற்றுக்கு நல்லது. செரிமானத்திற்கும் நல்லது.

நல்லெண்ணெய்

இதில் வைட்டமின் E, B6,மெக்னீசியம், கால்சியம், காப்பர் மற்றும் இரும்பு ஆகியவை நிறைவாக உள்ளன. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கொழுப்பைக் குறைக்கவும் உதவும். சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.

ஆளிவிதை எண்ணெய்

இதில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைவாக உள்ளது. செரிமானத்திற்கு நல்லது. நோய் அழற்சிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டது.

ஆலிவ் எண்ணெய்

இந்த எண்ணெயில் ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைவாக உள்ளது. உடல் எடையை ஃபிட்டாக வைத்துக்கொள்ள உதவக் கூடியது. சருமத்தை பாதுகாக்கும் அழகு ரகசியம் நிறைந்தது. தற்போது பலரும் பயன்படுத்தக் கூடிய எண்ணெய்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here