சமரச நாடகங்கள்…

0
12

புலன் ஐந்தையும்
செயலிழக்கச் செய்யும்
உந்தன் ஓரவிழிப் பார்வையில்
வீழ்கிறேனடா நான்…

கடலளவு நேசத்தில்
கடுகளவு கோபம்
என்ன செய்துவிடும்…

மது குவளையில் விழுந்த மலரென…
உந்தன் காதல் போதையில் விழுந்து தவிக்கிறேனடா…

கிளைதனில் அமர்ந்த கிளியென
சற்றே இளைப்பாறிக் கொள்கிறேன்
உந்தன் தோள்தனில் தலை சாய்த்து..

சமாதானத்திற்கான சமரச நாடகங்களை
நடத்திக் கொண்டிருக்கிறது
எந்தன் விரல்களை இறுக்கப் பற்றியவாறே
உந்தன் விரல்கள்…

-சசிகலா திருமால்
கும்பகோணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here