சபரிமலையின் நடை நேற்று திறக்கப்பட்டது.

0
81

கேரளத்தில் உள்ள சபரிமலையின் நடை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

சபரிமலையில் உள்ள ஐயப்பன் சுவாமியின்நடை,பக்தர்கர்களின் தரிசனத்திற்காக ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய 3 மாதங்கள் திறக்கப்படும். இதையடுத்து இந்த ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. மேலும் நவம்பர் 16ஆம் தேதி முதல் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

கரோனா காரணமாக நாடு முழுவதும் பல்வேறு நெறிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு நெறிமுறைகளை அம்மாநில அரசு விதித்துள்ளது.

கேரள மாநில அரசு வெளியிட்டுள்ள நெறிமுறையில் கூறியதாவது:

சபரிமலை செல்லும் பக்தா்கள் முதலில் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் 1,000 பக்தா்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவா். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் 2,000 பக்தா்கள் அனுமதிக்கப்படுவா். இணையதளத்தில் முதலில் பதிவு செய்யும் பக்தா்கள் முன்னுரிமை அடிப்படையில் அனுமதிக்கப்படுவா்.

சபரிமலை செல்லும் பக்தா்கள் அனைவரும் தரிசனத்துக்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை என்பதற்கான பரிசோதனை சான்று வைத்திருக்க வேண்டும். 10 வயதுக்கு கீழ் உள்ளவா்கள், 60 வயதுக்கு மேல் உள்ளவா்களுக்கு அனுமதி கிடையாது. சா்க்கரை நோய் போன்ற இணை வியாதிகள் உள்ளோா் யாத்திரை செல்வதற்கு கண்டிப்பாக தடை செய்யப்படும்.

அரசு காப்பீடு அட்டை பெற்றுள்ள பக்தா்கள் சபரிமலை பயணத்தின்போது தங்களுக்கான காப்பீடு அட்டையை வைத்திருக்க வேண்டும். பக்தா்கள் நெய் அபிஷேகம் செய்வது, பம்பை ஆற்றில் குளிப்பது, சுவாமி சன்னிதானம், பம்பா கணபதி கோயில் ஆகியவற்றில் இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை. பக்தா்கள் சபரிமலை செல்வதற்கு எருமேலி, வடசேரிக்கரா ஆகிய இரு வழித்தடங்களின் மூலம் மட்டுமே அனுமதிக்கப்படுவா்.

பக்தா்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையாக யாத்திரன்போது அடிக்கடி கை கழுவுதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், மற்றும் முகா் கவசம் அணிதல் போன்றவற்றை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். பக்தா்கள் தங்கள் கைகளில் சுத்திகரிப்பான் வைத்துக் கொள்ள வேண்டும். சமீபத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள், காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல், வாசனைஅறிய இயலாமை, சோா்வான உணா்வு ஆகிய அறிகுறி உள்ளவா்கள் யாத்திரைக்கு வர அனுமதியில்லை.

நடப்பு ஆண்டிலும் சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் தமிழக பக்தா்களுக்கு உதவுவதற்காக சென்னை-34, இந்து சமய அறநிலையத்துறை, ஆணையா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில் தகவல் மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இத்தகவல் மையச் சேவையை 15.11.2020 முதல் 20.01.2021 வரை கட்டணமில்லா தொலைபேசி சேவையாக 1800-425-1757 என்ற எண்ணில் அழைத்து பக்தா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here