1.புறஞ்செலாது அகத்துறைவர் ஆவதறிவார்; அஃதறியார்
புறஞ்சென்று நோய்வாங்கி பரப்புபவர்.’
2.
‘இருகரந் தூய்மை வேண்டுவதாம் வேண்டாதார்
பிறர்கரந் தீண்டாமை நன்று.’
3
‘எந்நோய்க் குண்டாம் மருந்து; மருந்தில்லை
தீநுண்மி தீண்டிய மகற்கு.’
4
‘செல்லுமிடத்துக் காப்பார் கவசம் அணிவார்–
அணியாராயின் காப்பார் எவருமிலர்.’
5
‘தெய்வத்துக் காகாதெனின் மானிடர்க்குப் பேரிடர்
தீநுண்மியென கரந்து வரும்.’
6
‘மறத்தலாகா எஞ்ஞான்றும் மருத்துவர் செவிலியர்
காவலரொடு துப்புரவாளர் தொண்டு.’
7
‘தற்காத்து தற்கொண்டார்ப் பேணி பிறர்பிணி
தீர்ப்பதாம் மாந்தர் தொழில்.’
8
‘தமரிவர் தமரிலர் எனக்கருத வேண்டா
எவ்வுயிரும் தாமெனலே உயர்ந்தன்று.’
9
‘நிலநடுக்கமும் பெருவெள்ளமும் ஞாலப்போரும் காட்டாதன
காட்டியதே கொரானாவெனும் கூற்று.’
10
‘போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சியதன் அகலமும்
ஓர்வதே காவலர் கடன்.’
சுவையிருந்தால் சுவைக்க!
நவையிருந்தால் பொறுக்க!
-மா.பாரதிமுத்துநாயகம்