கொரோனாவிற்குப் பின் உலகம்…

0
9

தூய்மையான காற்றை சுதந்திரமாய்
சுவாசிக்க கூட முடியவில்லை ..
மூச்சு முட்ட
முகமூடி கொள்ளையர்களைப் போல
அலைகின்றோம் நாம்…
கைதிகளாக அடங்கிவிட்டோம்
வீட்டு சிறையில்….
பழங்கால வாழ்க்கைக்குள்
நுழைகின்றோம் மெல்ல மெல்ல…
குடும்பத்தோடு குதூகலிக்க ஆரம்பித்தாலும்
இயல்பு நிலை பாதிக்கப்பட்டு
இயந்திர நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்
என்பதுதான் உண்மை…

காற்றோடு காற்றாய்
சுதந்திரமாய் சுற்றித் திரிகிறது
கண்ணுக்குத் தெரியாத
கிருமியொன்று…
கதவடைத்துக் கொண்டிருக்கிறோம் நாமெல்லாம் அதற்கு பயந்து….
கலிகால அவதாரமென
காட்சியளிக்கிறாரோ கடவுள்
கொரோனா ரூபத்தில்…

கைகூப்பித் தொழுகிறோம் நாங்கள்
காக்கும் கடவுளாம் மருத்துவர்களை…
மரண பீதியில்
மரணித்து போகின்றோம்
நொடிக்கொரு முறை….
கொரோனாவின் வரவிற்கு பின்
கொத்துக் கொத்தாய் பலியிட்டு கொண்டிருக்கிறோம்
மனித உயிர்களை…
தீர்வை நோக்கியே காத்திருக்கிறோம்
தீராத தாகத்தோடு..
கொரோனா எனும் உயிர் குடிக்கும்
ஒற்றை சொல்லிற்கு பயந்து..

-சசிகலா திருமால்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here