கொராணா அறியுமோ வெற்றியாளர் உழைப்பை!

0
61

சுழல் நாற்காலியில் அமர்ந்தபடியே
மலர்ந்த முகத்துடன்
அவர் திரும்பும் காட்சி நான் விரும்பிய ஒன்று!

கர்மவீரர் மேல் அளவற்ற பக்தி!

காங்கிரஸ் கட்சியின் மேல் அளவற்ற விசுவாசம்!

குமரியின் மீது தீராக் காதல்!

தன் மீதான நம்பிக்கை
தளர்வில்லாத உழைப்பு
ஊக்கமூட்டும் பேச்சு!
பூஜ்யத்தில் தொடங்கி
ராஜ்யத்தை ஆண்டவர்!

கடந்த ஆண்டு நாகர்கோவிலில் ஒரு மணவிழா
அருகில் வந்து
கடக்கும் போது
வணக்கம் சொன்னேன்.

மலர்ந்த முகம் மேலும் மலர்ந்தது!

அதைத்தான் மறக்க முடியவில்லை!

கொராணா அறியுமோ வெற்றியாளர் உழைப்பை!

-மா.பாரதிமுத்துநாயகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here