கேரளா மார்பிள் புட்டு

0
68

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – ஒரு கப்
ராகி மாவு – ஒரு கப்
மைதா மாவு – ஒரு கப்
தேங்காய்- ஒன்று
ஏலக்காய் பொடி – சிறிதளவு
செய்முறை

கோதுமை, மைதா, ராகி மாவுகளை தனித்தனியாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒவ்வொரு மாவையும் தனித்தனியாக உப்பு மற்றும் தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்.
ஏலக்காயை பொடி செய்து தேங்காய் துருவலுடன் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
புட்டு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதித்தவுடன் புட்டு குழாயில் முதலில் சிறிதளவு தேங்காய் துருவலை போடவும்.
பிறகு பிசைந்த மாவு ஏதாவது ஒன்றை போடவும், அடுத்த மாவு போடுவதற்கு முன் சிறிது தேங்காய் துருவல் போடவும், இதேபோல அடுத்த மாவையும் போடவும்.
இதேபோல் மூன்று முறை குழாயில் போட்டு வேக வைக்கவும்.
ஆவி வந்தவுடன் இறக்கி வைக்கவும்.
சுவையான மார்பில்புட்டு ரெடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here