கேரளத்தில், இலக்கியத்துக்கான ஓஎன்வி விருது பெரும் முதல் தமிழ் பேரரசர் கவியரசு வைரமுத்து!!

0
24

சிறப்புச்செய்திகள்! கேரளத்தில், இலக்கியத்துக்கான ஓஎன்வி விருது பெரும் முதல் தமிழ் பேரரசர் கவியரசு வைரமுத்து!! அவர்களுக்கு வேண்டிய புதுக்கவிதை!!

தேனியில் ஒருஊர் வடுகபட்டி !!
தேடி தவிக்குது இன்று தேனீயை காட்டி !!
செந்தமிழ் தேன்கவியாம்!! செந்நா புலமை பெற்ற ! இன்று வைரமாய் மின்னும் வைர+முத்துக் கவியாம்!

வைக்கம் வீரரை வயாரப்போற்றும்!! வாய்மையே வெல்லும் கவியாம் !!

செந்தமிழ்த் தேனி கேரளத்தில் கூடு கட்டியது
செவ்வனே! ஒரு தமிழ் கவி இலக்கியக் கூடு!!
தமிழ் தேன் உண்ட மயக்கம்!
அவர் தமிழ் பேசத் தந்த ஏக்கம்!!

அணுவைப் பிளந்த குரள் படித்துப்பாடி !
அதிலும் கவிகள் பல பாடி!!
தமிழ் பெருங்கடல் நீந்தியாடி !!
தமிழர் உள்ளங்களை வென்றது பலகோடி!!

மலையாளத்திலும் மாண்பு தேடி!! மானமிகு தமிழர் என்ற பட்டம் சூடி!!
மானம்காத்த மா மனிதராய் மகுடம் சூடி!!
மாபெரும் மனிதராய் தமிழுக்குமணி மகுடம் தேடி(ய) உம் மை!
அழகு பார்க்கிறோம்! வைர+முத்து வாய் பிரித்தாலும் ! மங்கா உயர்
பொருள் தரும் தமிழ் சொத்து வாய்!!

நீர்தமிழ் வளர்க்கும் அழியா வித்து!!
நீர் பெற்ற கிரீடம் உம் தலையில் !!
நீங்காது இருப்பதோ தமிழர் இதயத்தில்!!!

கலைஞருக்கு வாழ்த்துப் பாடிய கவி புலமையே!
கலைஞர் அன்பால் வாழ்த்தி வரவேற்பது தமிழக முதல்வருக்கு முறையே!!
அதில் நாம் அடைந்தோம் பெருமையே !

இளமை மாறா ! தமிழ் கவி சுவை குன்றாதது போல்!!
உம், அகவை குன்றாது! !வாழிய வாழியவே !!
வையம் உள்ளளவும்! வைரமுத்து வாய் மண்ணில் மின்னி !மறையாது வாழிய வாழியவே!!

என்றும் தமிழன்பன்
கவிதை மாணிக்கம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here