குழந்தைகளுக்கான சத்தான உணவுகள்.

0
52

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் சத்தான உணவுகள் மிகவும் அவசியமாக விளங்குகிறது. சில எளிதான உணவுகள் கூட அதிக சத்துக்களைக் கொண்டிருக்கும்.

அதில் முக்கியமான ஐந்து உணவுப் பொருட்களில் உடலினை சிறப்பாக பாதுகாக்க உதவும் சத்துக்கள் ஏராளமாக உள்ளன.

  1. வாழைப்பழம் – இதில் நார் சத்தும் உடலுக்குத் தேவையான பொட்டாசியசத்தும் அதிகப்படியாக காணப்படுகிறது. வாழைப்பழம் எலும்பு, சிறுநீரகம், இதயம் போன்றவற்றை பாதுகாக்க உதவுகிறது.
  2. பால் – குழைந்தைகளுக்கு தேவையான சுண்ணாம்பு சத்து, புரதச் சத்து மற்றும் வைட்டமின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. குழந்தைகள் அன்றாடம் இரண்டு அல்லது மூன்று டம்ளர் பால் கண்டிப்பாக அருந்த வேண்டும். அப்பொழுது தான் வளரும் குழந்தைகளின் எலும்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும்.
  3. முட்டை – இதில் அதிகப்படியான புரதச் சத்து, தாதுச்சத்து மற்றும் வைட்டமின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. முட்டை என்பது அதிக சத்துக்கள் அடங்கிய ஒரு மாத்திரை என்று கூறினால் அது மிகையாகாது. ஒரு முட்டையை சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு எளிதாக பல சத்துக்கள் கிடைத்து விடுகின்றன.
  4. உலர் திராட்சை – இதனை சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு இரும்பு சத்து மற்றும் நார் சத்து எளிதாக கிடைக்கிறது. சாப்பிடுவதற்கு இணிப்பாகவும் சத்தானதாகவும் உள்ளதால் குழந்தைகளும் விரும்புவர். உலர் திராட்சையை சுடுநீரில் நன்கு கழுவிய பிறகே குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும்.
  5. பருப்பு வகைகளில் – அதிகமான புரதச்சத்து மற்றும் தாதுச்சத்து நிரம்பியுள்ளது. இதய நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உடலில் உள்ள தேவையான கொழுப்பை தக்க வைக்கவும் புரதச் சத்து உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான ஆகாரமாகவும் பருப்பு வகைகள் உள்ளன. முந்திரி, வேர்க்கடலை, பாதாம் போன்றவைகள் அதிக சத்துக்கள் நிறைந்த பருப்புகளாகும்.

குழந்தைகளுக்கு கடைகளில் விற்கும் திண்பண்டங்களை வாங்கிக் கொடுத்து உடல் நலத்தை வீணாக்குவதை விட சத்தான உணவு பொருட்களை வீட்டில் வாங்கி வைத்து அவ்வப்போது கொடுப்பதால் உடலுக்கு எந்தவித தீங்கும் விளைவிக்காது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here