தேவையான பொருட்கள் :
பொருள் – அளவு
காளான்கால் கிலோ
தக்காளி 3
வெள்ளை மிளகுத்தூள்4 டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
சர்க்கரை 2 டீஸ்பூன்
வெண்ணெய் தேவைக்கேற்ப
கான்பிளவர்2 டேபிள் ஸ்பூன்
பால்கால் லிட்டர்
செய்முறை :
முதலில் தக்காளியை அரைத்து கொள்ள வேண்டும். தண்ணீரில் காளானை வேக வைக்கவும். பின் காளான் வெந்ததும் அரைத்து வைத்துள்ள தக்காளி, பேஸ்ட்டை ஊற்ற வேண்டும். கொதித்தவுடன் வெள்ளை மிளகுத்தூள், உப்பு, சர்க்கரை வெண்ணெய் சேர்க்கவும். கான் பிளவர் மாவை சிறிது நீரில் கலக்கி சூப்பில் சேர்த்து கொதிக்க வைக்கவும். இறுதியாக பால் ஊற்றி இறக்கவும். சுவையான காளான் சூப் தயார். இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரும்.