காபி தினம் அக்டோபர் 01

0
86

 

ஒற்றைத் தலைவலிக்கு மருந்தாகத் திகழும் காபி, அல்சைமர் நோய், பார்க்கின்சன் நோய் ஆகியவற்றிற்கும் பயனளிக்கும் என்றாலும், காபி -யின் கேஃபீன் குறிப்பிட்ட அளவைத் தாண்டும்போது, அது உடல்நலப் பாதிப்புகளுக்குக் காரணியாகும் என்கிறது மருத்துவ ஆய்வு.

காபி…
அதன் சுவை நாக்கில் படுவதற்கு முன்பாகவே அதன் மணம் மூக்கின் வழியாக மூளையை அடைந்து, நமக்கு புத்துணர்ச்சியைத் தந்துவிடக்கூடிய ஒரு பானம். காலை எழுந்தவுடன், முன்பகலில், மதியம், பின்மதியம், மாலை, இரவு என உலகெங்கிலும் உணவைவிட அதிக வேளை உட்கொள்ளப்படக்கூடிய ஒரு பானமாய் இருக்கிறது. உலகெங்கிலும், ஒவ்வொரு நாளும், 200 கோடி கப் காபியைப் பருகுகிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். மேலும், அதிகப்படியாக விற்று வாங்கக்கூடிய பொருள்களில், உலக அளவில் பெட்ரோலியத்திற்கு அடுத்ததாக இருப்பதும் இந்தப் பானம்தான் என்று கூறப்படுகிறது.

காபி, தனது சுவை மற்றும் மணத்தால் உலக அளவில் ரசிகர்களைப் பெற்றுள்ளதற்கு இன்னொரு காரணம், சூடாகவும் குளிர்ச்சியாகவும் பரிமாறக்கூடிய ஒரு பானம் என்பதுதான். இப்படி, பன்முகத் தன்மைகொண்ட இந்த காபியில் என்னதான் உள்ளது என்பதை அறிந்துகொள்வதற்கு முன், அதன் வரலாற்றைப் பற்றி கொஞ்சம் அறிவோம் வாருங்கள்…

Coffea arabica என்ற தாவரப்பெயர் கொண்ட காபி செடியின் நன்கு பழுத்த காபி பழங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கொட்டைகளைப் பதமாக வறுத்த பொடிதான், இந்த காபி.

எத்தியோப்பியா, மடகாஸ்கர், மொரீஷியஸ் ஆகிய நாடுகள் இதன் பிறப்பிடமாக அறியப்படுகின்றன. எத்தியோப்பிய நாட்டில், காஃவா (Kaffa) என்ற இடத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவர்கள், அங்கு வளர்ந்த ‘பூன்னா’ செடிகளை உண்ட தங்களின் ஆடுகள், அதிக வேகத்துடனும் ஆட்டத்துடனும் உலவி வந்ததையும், இரவிலும் தூங்காமல் விழித்திருந்ததையும் கண்டு வியந்து, அந்த ஆடுகள் உண்ட செடியின் பழங்களைத், தாங்களும் உண்டு உற்சாகம் அடைந்தனராம். இப்படித் தோன்றியதுதான் காபி என்கிறது வரலாறு.

மேலும், அரேபிய நாட்டின் சூஃபி துறவிகள், தங்களின் வழிபாடுகளுக்காக விழித்திருக்கவேண்டி, முதன்முதலாக காபி பயன்படுத்தினர் என்றும் அறியப்படுகிறது.

ஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகளிலிருந்து ஐரோப்பா சென்றடைந்த காபி, ஆரம்ப நாள்களில், சாத்தானின் கறுப்பு கசப்பு பானம் என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட பதினேழாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான், காபி படிப்படியாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்து, “The most favorite drink of Civilized World” என்ற நிலையை அடைந்திருக்கிறது.

காபி இவ்வளவு விரும்பப்படுவதற்குக் காரணம் என்னவென்றால், அதிலுள்ள கேஃபீன் (Caffeine) என்ற பொருளை ஊட்டச்சத்து நிபுணர்கள் கைகாட்டுவதுடன், நாம் அன்றாடம் பருகும் ஒரு டம்ளர் (200ml) காபியில் 80 – 120mg வரை, கேஃபீன் இருக்கக்கூடும் என்றும் கூறுகிறார்கள்.

காபியைப் பருகிய 5 -10 நிமிடங்களுக்குள், அதில் உள்ள கேஃபீன் மூளை நரம்புகளின் அடினோசின் (Adenosine) என்ற தாதுப்பொருளின் அளவைக் குறைப்பதுடன், டோப்பமைன் அளவைக் கூட்டுவதால், அது நம் மனதிற்கு புத்துணர்ச்சியையும் சுறுசுறுப்பையும் ஏற்படுத்துகிறது.

மேலும், அட்ரீனல் சுரப்பியைத் தூண்டுவதன் மூலமாக மூளைக்கு மட்டுமல்ல, நமது தசைகளுக்கும் புத்துணர்ச்சியைத் தர வல்லது காபி என்கிறது, விஞ்ஞான ஆய்வு.

காபி – ஏன்? எவ்வளவு? – கமகம தகவல்கள்! | COFFEE
முக்கியமாக, மன அழுத்தத்தைக் குறைத்து, விழிப்புத் திறனையும் கூட்டுவதால், பரீட்சை நேரங்களில் மாணவர்களால் இது வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஒற்றைத் தலைவலிக்கு மருந்தாகத் திகழும் காபி, அல்சைமர் நோய், பார்க்கின்சன் நோய் ஆகியவற்றிற்கும் பயனளிக்கும் என்றாலும் காபியின் கேஃபீன், குறிப்பிட்ட அளவைத் தாண்டும்போது, அது உடல்நலப் பாதிப்புகளுக்குக் காரணியாகும் என்கிறது மருத்துவ ஆய்வு.

அல்சர், குடல்புண், பற்சிதைவு, எலும்புத் தேய்மானம், அதிக கொலஸ்ட்ரால், ரத்தச்சோகை, இருதய வால்வுகளின் வீக்கம் என காபி உண்டாக்கும் நீண்டகால பக்கவிளைவுகளுக்கு முக்கியக் காரணியாக விளங்குகிறது இந்தக் கேஃபீன் என்பதும், காபி பிரியர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய செய்தி.

இதெல்லாம் இப்படியிருக்க, இப்போது என்ன புதிதாக கிரீன் காபி என்கிறீர்களா..? அதையும் தெரிந்துகொள்வோம்…

2012-ம் ஆண்டு, அமெரிக்காவின் மிகப் பிரபலமான டாக்டர் ஆஸ் நிகழ்வில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது, இந்த “காபியின் நிறம் பச்சை!”

நாம் உபயோகிக்கும் இந்த காபி கொட்டைகள், நன்கு பழுத்த காபி பழங்களின் கொட்டைகள் ஆகும். இந்தக் கொட்டைகளை நாம் நேரடியாக உபயோகிக்காமல், அதன் மணம் மற்றும் சுவைக்காக கொட்டைகளை வறுத்துப் பொடிசெய்து உபயோகித்துவருகிறோம். இப்படி வறுக்கும்போது, காபி கொட்டைகளில் இருக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்டுகள் அழிந்துவிடுவதால், சில நன்மைகளை இழக்கிறோம் என்றும், அவற்றை பச்சையாகவே பயன்படுத்தும்போது ஏற்படும் நன்மைகள் அதிகமாய் இருக்கிறது என்றும் முதன்முதலில் விளக்கியது இந்த ஆய்வு.

அதன்பின் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், பச்சை நிற காபிக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளன.

பச்சை நிற காபி கொட்டைகளில் அதிகம் காணப்படுகிறது, க்ளோரோஜெனிக் அமிலம். (Chlorogenic Acid) பல்வேறு நன்மைகளைத் தருவதுடன், நம் உடலின் வளர்சிதை மாற்றங்களை அதிகப்படுத்துகிறது. மேலும், இந்த கிரீன் காபி, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுகிறது. செல்களுக்கும் தசைகளுக்கும் ஆக்சிஜன் அளவைக் கூட்டி, புத்துணர்ச்சியைத் தருகிறது. இவை மட்டுமன்றி, பசியுணர்வைக் கட்டுப்படுத்தி, கலோரிகளையும் குறைப்பதால் உடற்பருமனைக் குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது, இந்த கிரீன் காபி.

மேலும், ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், மாரடைப்பு நோய், புற்றுநோய் ஆகியவற்றிலிருந்து காக்கும் கிரீன் காபியின் க்ளோரோஜெனிக் அமிலம், அனைத்திற்கும் மேலாக, கல்லீரலின் கிளைக்கோஜன் அளவைக் குறைத்து, சர்க்கரை நோய்க்குப் பெரிதும் பயனளிக்கிறது.

காலை, மாலை என நாள் ஒன்றுக்கு இரண்டு முறை பரிந்துரை செய்யப்படும் இந்த கிரீன் காபியின் சுவை பிடிக்காத காபி ரசிகர்களுக்கு, இது மாத்திரை வடிவத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கிரீன் காபியின் நன்மைகளை ஊர்ஜிதப்படுத்த, இன்னும் பல்வேறு ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன என்று ஹார்வர்டு பல்கலைக்கழகம் கூறியுள்ளபோதும், கறுப்பு காபியைவிட, பச்சை நிற காபியின் நன்மைகள் அதிகம் என்பதை மறுக்க முடியாது என்கிறது, இதுவரை வந்துள்ள ஆய்வின் முடிவுகள்.

`ஒரு நாளைக்கு இத்தனை கப்புக்கு மேல போனா..!’ – காபி பிரியர்களே அலர்ட்
ஆக, உடற்பருமன் கலோரி விஷயங்களுக்காக, கசப்புடன் கிரீன் டீ குடிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் காஃபி பிரியர்களே… சீக்கிரமே நீங்கள் உங்களுக்குப் பிடித்த காபிக்கு, அதாவது இந்தக் கிரீன் காஃபிக்கு மாறிவிடலாம்.

 

காபி பிரியரா நீங்கள்? – காபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்

காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடனோ, மதிய உணவை முடித்த பின்னரோ, நடுநடுவே சிறு இடைவேளையின்போது அல்லது இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன்னரோ என உலகின் பெரும்பாலானோருக்கு எப்போதும் பிடிக்கும் ஒரு பானமாக காபி உள்ளது.

சர்வதேச காபி கழகத்தின் கணக்கீட்டின்படி, கடந்த 1991ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 90 மில்லியன் 60 கிலோ காபி பைகள் பயன்படுத்தப்பட்டதாகவும், இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட அபரிமிதமான வளர்ச்சியின் காரணமாக இந்தாண்டின் காபி பயன்பாடு 160 மில்லியன் பைகளை தாண்டுமென்றும் தெரிகிறது.

நேற்று (திங்கட்கிழமை) உலக காபி தினம் கொண்டாடப்பட்ட நிலையில், காபியை பற்றி உங்களுக்கு தெரியாத 10 ஆச்சர்யமளிக்கும் தகவல்களை தெரிந்துகொள்வோம்.

1. காபியும் ஒரு பழம்தான்!

பழுப்பு நிறத்திலிருக்கும் கொட்டையை பொடி செய்தே நீங்கள் காபி போடும் பொடி தயாரிக்கப்படுகிறது என்பது உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். ஆனால், அந்த கொட்டைகள் காபி செர்ரி என்ற பழத்தினுள்ளிருந்துதான் எடுக்கப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், நீங்கள் ஒரு காபி செர்ரி பழத்தை கடித்துப்பார்த்தால் அதனுள்ளே இரண்டு விதைகள் இருக்கும். அதுதான் தட்டையான முகம் கொண்ட பக்கங்களுடன் வளர்ந்து பெரிய கொட்டைகளாக மாறுகிறது.

காபி பிரியரா நீங்கள்? – காபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES
இரண்டு விதைகளில் ஏதாவதொன்று வளராமல், ஒன்று மட்டும் வளர்ந்தால் அதற்கு பீபெர்ரி என்று பெயர். சாதாரண காபியை விட இந்த பீபெர்ரி கசப்பாக இருக்கும்.

2. சிலர் காபியை சாப்பிடுவார்கள்!

காபி பிரியரா நீங்கள்? – காபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES
நீங்கள் பல ஆண்டுகாலமாக காபி குடித்து வருபவராக இருக்கலாம். ஆனால், காபியை உண்ணும் வினோத பழக்கம் கொண்ட சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சில காபி நிறுவனங்கள் வீணான காபியை கொண்டு மாவை உருவாக்கி அதை பிரட், சாக்லேட், சாஸ் மற்றும் கேக்குகளிலும்கூட பயன்படுத்துகிறார்கள்.

3. கழிவிலிருந்து தயாரிக்கப்படும் காபி கொட்டை

காபி பிரியரா நீங்கள்? – காபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES
புனுகுப் பூனையின் கழிவிலிருந்து தயாரிக்கப்படும் காபி கொட்டைதான் உலகிலேயே மிகவும் விலையுயர்ந்தது ஆகும்.

இந்தோனீசியாவிலுள்ள புனுகுப் பூனையின் கழிவிலிருந்து தயாரிக்கப்படும் கோபி லுவாக் என்னும் காபி கொட்டையின் 500 கிராம் 700 டாலர்கள் வரை விற்கப்படுகிறது.

காபி கல்லீரலுக்கு நல்லதா? என்ன சொல்கிறது ஆய்வு?
காபி குடிப்பதால் நீண்ட காலம் வாழ முடியுமா?
அதாவது, சாதாரண காபி கொட்டைகள் இந்த பூனைகளுக்கு கொடுக்கப்பட்டு அதன் மலம் வழியாக அது வெளியேறும் வரை காத்திருந்து அந்த கொட்டைகள் சேகரிக்கப்பட்டு, பொடி செய்து விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், தாய்லாந்திலுள்ள யானைகளால் உண்ணப்பட்டு அதன் மலத்திலிருந்து பெறப்படும் பிளாக் ஐவோரி காபி என்றழைக்கப்படும் காபி கொட்டைகள் தற்போது பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இதன் 35 கிராம் அளவுள்ள சிறிய பை 85 டாலர்களுக்கு அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுகிறது.

4. காபி உடல்நலனுக்கு நல்லது…

காபியில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் நமது செல்களை நச்சுகள், இரசாயனங்கள் போன்றவற்றினால் பாதிப்படைவதிலிருந்து தடுக்கிறது.

இந்தாண்டின் தொடக்கத்தில் சஞ்சிகை ஒன்றில் பதிப்பிக்கப்பட்ட ஆராய்ச்சி முடிவின்படி, ஒரு நாளைக்கு மூன்று கோப்பை காபி குடிப்பவர்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்களினால் உயிரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

காபி குடித்தால் புற்றுநோய் வருமா- புதிய ஆய்வு சொல்வது என்ன-
தூக்கத்தை மட்டுமல்ல, உடல் நேர ஒழுங்குணர்வையும் பாதிக்கும் காபி
10 ஐரோப்பிய நாடுகளிலுள்ள ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் 16 ஆண்டுகளாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், ஒருவரது ஆற்றலையும், விளையாட்டு திறனையும் உடனடியாக புதுப்பிப்பதற்கு காபி பயன்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

5. காபி ஆபத்தையும் விளைவிக்கலாம்…

காபி பிரியரா நீங்கள்? – காபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்
பட மூலாதாரம்,REUTERS
ஒருவித ஊக்கியாக செயல்படும் காபியை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் பயன்படுத்தினால் அது உங்களது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கலாம் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

குறிப்பாக நீங்கள் கர்ப்பமாக இருந்தால் காபியின் அளவை குறைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், கர்ப்பமாக இருக்கும்போது அதிகளவு காபியை அருந்துவது பிறக்கும் குழந்தை எடை குறைவாக இருப்பதற்கோ அல்லது சில சமயங்களில் கருச்சிதைவுக்கோ காரணமாகலாம்.

அதாவது, கர்ப்பமாக உள்ள பெண்கள் ஒருநாளைக்கு இரண்டு கோப்பை காபிக்கு மேல் குடிக்கக்கூடாது என்று பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

6. காபி எங்கு, யாரால், எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரியுமா?

காபி பிரியரா நீங்கள்? – காபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES
ஒன்பதாவது நூற்றாண்டில் எத்தியோப்பியாவை சேர்ந்த கல்டி என்ற ஆடு மேய்ப்பவர், தனது ஆடுகள் வித்தியாசமான மரத்திலுள்ள கொட்டைகளை உண்பதையும், அதன் காரணமாக அவை இரவு முழுவதும் சோர்வடையாமல் கண் விழித்திருந்ததையும் கண்டு ஆச்சர்யமடைந்தார்.

மாதவிடாய் மன அழுத்தம்: தெரிந்து கொள்ள வேண்டியவை
இரவில் நன்றாக தூங்கவேண்டுமா? – இந்த 6 வழிகளை பின்பற்றுங்கள்
இதுகுறித்து, தனது ஊரிலுள்ள துறவிகளிடம் கல்டி கூறியதாகவும், அதை உணர்ந்த அவர்கள் அக்கொட்டைகளை சூடான பானத்தில் கலந்து குடித்தால் வெகுநேரம் வழிபாடுகளை சோர்வின்றி செய்ய முடியுமென்று எண்ணியதாகவும் நம்பப்படுகிறது.

7. காபி என்றால் ஒயின் என்று அர்த்தம்

காபி பிரியரா நீங்கள்? – காபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES
15ஆம் நூற்றாண்டு வாக்கில் காபி ஏமனில் பெருமளவில் சாகுபடி செய்யப்பட்டது. காபி ஏமன் மொழியில் ஒயினை குறிக்க பயன்படுத்தப்படும் குவாஹா வார்த்தையால் வழங்கப்பட்டது.

ஒரு நூற்றாண்டுக்கு பிறகு பெர்சியா, எகிப்து, சிரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் காபி பயிரிடப்பட்டது.

8. உலகின் முதல் காபி கடை….

காபி பிரியரா நீங்கள்? – காபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்
பட மூலாதாரம்,AFP
காபி வீடுகளில் மட்டுந்தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தால் காபி பிரியர்கள் பலரால் அலுவலகத்தில் வேலையோ, வெளியே பயணமோ செய்ய முடியுமா? வாய்ப்பே இல்லைதானே? ஆம், தற்போது வீதியெங்கும் காணப்படும் காபி கடைகள் முதன் முதலாக மத்திய கிழக்கு நாடுகளில்தான் தொடங்கப்பட்டன.

காபி கடைகள் ஆரம்பிக்கப்பட்ட வெகு விரைவிலேயே அவை ஊர் கதை பேசும் இடமாகவும், செஸ் உள்ளிட்ட விளையாட்டுகள் விளையாடும் இடமாகவும், பாட்டு கேட்கும் பகுதியாகவும் மாறிவிட்டன.

9. காபி அதிகமாக சாகுபடி செய்யப்படும் நாடு

காபி பிரியரா நீங்கள்? – காபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்
பட மூலாதாரம்,REUTERS
நீங்கள் இந்தியாவில் காபி குடித்தாலும், அமெரிக்காவில் காபி குடித்தாலும் அது ஒரே சுவையாக இருக்கக்கூட வாய்ப்புண்டு. ஏனெனில், “பீன் பெல்ட்” என்று என்றழைக்கப்படும் மெக்ஸிகோவின் கிழக்குப்பகுதிலிருந்து பப்புவா நியூகினியா வரையிலான பகுதியில்தான் மிக அதிகளவிலான காபி சாகுபடி செய்யப்படுகிறது.

அதாவது, அதிகபட்சமாக பிரேசிலில் 36 சதவீத காபியும், வியட்நாமில் 18 சதவீதமும், கொலம்பியாவில் 9 சதவீத காபியும் உற்பத்தி செய்யப்படுகிறது.

10. அதிக காபி குடிக்கும் நாடு

காபி பிரியரா நீங்கள்? – காபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES
சர்வதேச காபி கழகத்தின் தரவின்படி, உலகிலேயே பின்லாந்தை சேர்ந்த மக்கள்தான் அதிகளவில் காபி பருகுகின்றனர். அதாவது ஒரு வருடத்திற்கு, பின்லாந்தை சேர்ந்த ஒருவர் சுமார் 12 கிலோ காபியை பருகுகிறார்.

அதைத்தொடர்ந்து, நார்வே (9.9 கிலோ). ஐஸ்லாந்து (9 கிலோ), டென்மார்க் (8.7 கிலோ) ஆகிய நாடுகள் உள்ளன.

இனிய காபி நாளாகட்டும்! #InternationalCoffeeDay

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here