காதல் மொழி…

0
38
முத்தமிழ் சொல்லெடுத்து
கவிதைகளால்
காதல் மொழி பேசும் கள்வனே….
கவிபாடும் கண்களால்
கரைய வைக்கிறாய்
எந்தன் கல் மனதை…
தேன் தமிழ் சொல்லில்
தேவதை என்கிறாய் என்னை…
வெட்கத்தில் சிவந்தவளை
மார்போடு அணைத்து முத்தமிடுகிறாய்….
முத்தமிழோடு சேர்ந்து
உந்தன் முத்தமும் இனிக்குதடா….
உந்தன் அதீத காதலால் எனைகொன்று
எனதன்பை வெல்கிறாயடா நீ…
-சசிகலா திருமால்
கும்பகோணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here