காதலெனும் தேர்வெழுதி…

0
10

காதலெனும் தேர்வெழுதி…

இதயம் இப்போது என்னிடம் இல்லை//
இதுவரை இதுபோல் உணராத தொல்லை//
மாதவம் கலைந்து விரதமோ விரயம்//
மாசில்லா உனதன்பில் கல்லும் கரையும்//

கனியும் அமுதமும் நாவில் கசக்குது//
கனலிடைப் புழுவாய் உயிரும் துடிக்குது//
கண்ணழகில் நிலவு மேகத்தில் ஒளிந்தது//
கன்னத்துக் குழியில் தடுமாறி விழுந்தது//

எண்ணத்தைச் சொல்லாமல் இரகசியம் காத்தேன்//
ஏற்பாயோ என்றெண்ணித் தினமும் செத்தேன்//
இன்னமும் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்//
இன்ப மாலை தொடுப்பாயெனப் பூத்திருக்கிறேன்//
தேக்கி வச்ச காதலைத் தீர்க்கனுமே//
தேவைக்கு அதிகமா கொடுத்துக் கேக்கனுமே//

சு சுசிலா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here