காதல் இல்லாத இடமென்று
ஒன்று உண்டா?
காதல் காவியம் படைக்காத
காதலர்கள் எவராவது உண்டா?
கருவறையிலும் காதல்
உண்டு!
கல்லறையிலும் காதல்
உண்டு!
முதல் நாள் தொடங்கி
வாழ்நாள் இறுதி நாள் வரை “காதல்”
உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது
போற்றப்படுகிறது தினம் தினம்
“காதலர்கள் தினமாய்”!
வாழ்நாட்கள் முழுவதும்
காதல் நிறைந்து விட
அது தான் “வரம்”!
காதல் செய்யாதவர்கள்
கூட “காதல் காதல்” என்று
பலமுறை உச்சரிக்கும்
தினம் “காதலர்கள் தினம்”!
காதலை மறந்தவர்கள்
கூட “காதல்” திரும்ப திரும்ப நினைவுப்படும்
தினம் “காதலர்கள் தினம்”!
✍️ பாரதி
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
#காதலர் தினம்