காகிதத்தின் கனத்த இதயமொன்று… 

0
13

காகிதத்தின்
கனத்த இதயமொன்று…

“வேண்டும் வரை உறவாடி
தேவை தீர்ந்ததும்
மனதிலிருந்து வீசியெறியப்பட்டதன்
உணர்வுகளின் வலியில்
இன்றும் உயிரோட்டமில்லாத ஜடமாய்தான்
துடித்துக் கொண்டிருக்கிறது
எனது இதயம்”…
என்ற யாரோ ஓர் கவிஞனின்
சுமையேறிய வரிகள்…
யாருக்கு பொருந்தியதோ இல்லையோ…

காற்றில் படபடத்து
எங்கிருந்தோ வந்து
என் கரங்களில் தட்டுத்தடுமாறி
தவழ்ந்து…
என்னை படிக்க மாட்டாயா.. என்று
என்னை ஏக்கமாய் பார்த்துக் கொண்டிருக்கும்…
யாரோ சுண்டல் தின்றுவிட்டு
வீசியெறிந்த அக்காகிதத்திற்கு
கனகச்சிதமாய் பொருந்தி போயிற்று…

-சசிகலா திருமால்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here